கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உலகில் பல முன்னணி வீரர்களை தனது பந்து வீச்சில் வீழ்த்திய நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வானார். டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்த நடராஜன் தனது முதல் ஒரு நாள் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் விளையாடி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் நெட் பவுலராக இணைந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடினார். இந்த போட்டியிலும் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இதையும் பாருங்க : இதுக்கு வாழ்த்து சொல்லாமலே இருக்கலாமே – தாதா சாகேப் விருது வென்ற ரஜினிக்கு வாழ்த்து சொன்ன கமலை கேலி செய்த விஜய் டிவி சீரியல் நடிகை.

Advertisement

இத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நடராஜனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. தனது சொந்த ஊர் சின்னப்பம்பட்டி திரும்ப இருந்த நடராஜனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சுப்மன் கில், சிராஜ் ஆகியோருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா தார் என்கிற ஒரு காரை பரிசாக அளிப்பதாக அறிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் அறிவித்தபடி எல்லோருக்கும் சில தினங்களுக்கு முன்னர் கார் பரிசாக அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த இந்த மஹிந்திரா தார் காரை தனது பயிற்சியாளரும், வளர்ச்சிக்கு முக்கியமான இருப்பவருமான ஜெயபிரகாஷ்க்கு பரிசாக அளித்தார் நடராஜன். இப்படி ஒரு நிலையில் தனக்கு காரை பரிசாக அளித்த ஆனந்த் மஹிந்திராவிற்கு ரிட்டர்ன் கிபட்டாக, நடராஜன் கப்பா டெஸ்டில் தான் பயன்படுத்த்திய டி-ஷிர்ட்டில் கையெப்பம் போட்டுஅனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, நன்றி நட்டு, இதை நான் பொக்கிஷமாக பாதுகாப்பேன், பெருமையுடன் அணிவேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement