இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் 11 மார்ச் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி திரைப்படம் தான் தி காஷ்மீர் ஃபைல்ஸ். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்தது. இந்தத் திரைப்படம் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரத்தை விட்டு வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி மற்றும் புனித் இஸ்ஸார் ஆகியோர் நடித்து இருந்தனர்.

மேலும், இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து 300 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளை செய்தது. 989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்தும், அங்கு நடந்த படுகொலைகள் குறித்தும் பேசும் விதத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்தப் படம் வெளியானபோது சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் தேசிய விருதுகளை வென்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கும் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் ‘தி காஸ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டு இருப்பதற்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் ‘“69ஆவது தேசிய திரைப்பட விருது-இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் ‘கடைசி விவசாயி’ படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!

மேலும், ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஓவ்வொரு முறை தேசிய விருது அறிவிக்கப்படும் போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த முறை அல்லு அர்ஜுனுக்கு எல்லாம் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கிடைத்து இருப்பதை பலர் விமர்சித்து வருகின்றனர். போல 2021 ஆம் ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமா பல படங்கள் வெளியாகவில்லை. மேலும், ஜெய் பீம் போன்ற சிறந்த படங்கள் கூட Ottயில் தான் வெளியாகி இருந்தது. ஜெய் பீம் போல பல்வேறு படங்கள் Ottயில் வெளியானதால் தகுதியான பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்காமல் போய்யுள்ளது.

Advertisement