மிஸ்கின் மட்டும் இல்ல இந்த நடிகர் கூட யூத் படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகம்.

0
191162
natty
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். தளபதி விஜய் அவர்களின் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “யூத்” படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும், இந்த படத்தை வின்சென்ட் செல்வா இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் ஒரு பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகரும் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததோடு இந்த படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்து உள்ளார்.

-விளம்பரம்-

அது வேறு யாரும் இல்லை, நட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் நடராஜன் சுப்பிரமணியம். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பின்னர் கதாநாயகனாக அவதாரமெடுத்தவர் நட்டி நாகராஜ். மிளகாய் படத்தின் மூலம் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.

- Advertisement -

இவர் நடிகராக வருவதற்கு முன்பு ஒளிப்பதிவாளராகத் தான் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதன் முதலில் யூத் படத்தின் மூலம் தான் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ள இவர். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான புலி,துப்பாக்கி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளரும் இவர் தான் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

இது ஒரு புறம் இருக்க இதே யூத் படத்தில் தான் இயக்குனர் மிஷ்கினும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். ஆம், இயக்குனர் மிஸ்கின், ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், இயக்குனர் கதிரிடம் கூட இயக்குனர் மிஸ்கின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement