பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். சமீபத்தில் இவருடைய தங்கை புற்றுநோயால் இறந்து போனார். பின் நிகழ்வால் பாலிவுட் திரை உலகமே சோகத்தில் மூழ்கியது என சொல்லலாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான “பேட்ட” படத்தில் நடித்தவர் தான் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் இந்த படத்தில் சிங்காரம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் மூலம் நவாசுதீன் சித்திக் அவர்கள் தமிழக மக்கள் மனதில் கூட இடம் பிடித்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தில் வேற லெவல்ல ரசிகர்களை மிரள வைத்தது என்று சொல்லலாம்.

நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலம் புதானா என்ற கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். ஆரம்பத்தில் இவர் நாடகங்களில் தான் நடித்து வந்தார். பின்னர் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் படிப் படியாக முன்னேறி தற்போது பாலிவுட் சினிமா உலகில் தவிர்க்க முடியாத கலைஞராக மாறி உள்ளார். இவருடைய தங்கை ஷியாமா சித்திக் ஆவார். ஷியாமாவுக்கு 18 வயதாக இருக்கும் போது மார்பக புற்றுநோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் தங்கை ஷியாமா சித்திக் பல நாட்களாகவே புற்றுநோயால் அதிக அவஸ்தைக்கு உலகை உள்ளார். மேலும், ஷியாமா உடல் நிலை மிக மோசமான நிலைக்கு போனது.

Advertisement

தற்போது 26 வயது அவருடைய தங்கை ஷியாமா சில நாட்களாக கேன்ஸர் நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார் என்று உறவினருக்கும், சோசியல் மீடியாவுக்கு தெரிய வந்தது உள்ளது. அதோடு இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டார். அதுமட்டும் இல்லாமல் இவரை காப்பாற்ற வேண்டிய நிலையை எல்லாம் அவர் தாண்டி உள்ளதாக மருத்துவர்கள் வட்டாரத்தில் தெரிவித்தார்கள். நவாசுதீன் சித்திக் அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்த போது தான் ஷியாமா சித்திக் இறந்தார் என்று தெரிய வந்தது. பின் தன் சகோதரியின் இறப்பை அறிந்து அவர் இந்தியா திரும்பினார். நடிகர் நவாசுதீன் சித்திக்கு எல்லாமுமாக இருந்தது அவருடைய தங்கை தான்.

தற்போது தங்கையை பறி கொடுத்ததனால் நடிகர் நவாசுதீன் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அது மட்டுமில்லாமல் நவாசுதீன் நிலைமை பார்த்து பாலிவுட் திரை உலகமே பெரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளது என்று குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகமே அவருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள். பின் இவர்களது சொந்த ஊரான உத்திரபிரதேசம் புதானாவில் ஷியாமாவுக்கு இறுதி சடங்குகள் எல்லாம் நடைபெற்றது.

Advertisement
Advertisement