இந்திய சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய வாழ்க்கையை பஸ் கண்டக்டர் என்ற சிறு புள்ளியிள் தொடங்கி இன்று உலகமக்கள் அனைவரும் அன்னார்ந்து பார்க்கும் அளவிற்கு கோட்டிகளை சம்பளம் பெற்று இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பல சூப்பர்ஹிட் அடைத்த படங்களை கொடுத்த ரஜினிகாந்திற்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தயே வைத்திருக்கிறார்.

இவர் நடித்த ரசிகர்களில் மறக்க முடியாத சில திரைப்படங்களான அண்ணாமலை, முத்து, ராஜாதி ராஜா, படையப்பா, குருசிஷ்யன் போன்ற வெற்றித்திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ராதாரவி. பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரதிலும் நடித்த இவர் அப்போது பிரபலமான வில்லன் நடிகராக திகழ்ந்து வந்தார். மேலும் ராதாரவி வில்லனாக நடித்த ரஜினிகாந்த் படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து. இதனால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். ஆனால் இப்படி நெருங்கி இருந்த இவர்கள் “அருணாச்சலம்” திரைப்படத்திற்கு பிறகு பிரிந்தது குறித்து ராதாரவி பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார்.

Advertisement

அருணாச்சலம் :

அருணாச்சலம் திரைப்படமானது நடிகர் ரஜினிகாந்த் வாழ்கையில் மறக்க முடியாத திரைப்படம் என்று சொல்லலாம் இத்திரைப்படமானது 1997ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த கதாநாயகனாகவும், சௌந்தர்யா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர், மேலும் ரம்பா, மனோரமா, ரகுவரன், விச்சு விஷ்வனாத், வடிவுக்கரசி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

மாறுபட்ட கதை :

அருணாச்சலம் திரைப்படமானது ஆங்கிலத்தில் வெளியான “ரிவஸ்டர்ஸ் மில்லியன்” என்ற நாவலை தழுவி தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்துடைய அப்பா மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனால் வாழ்க்கை சூழலினால் அருணாச்சலம் கிராமத்தில் ஒரு குடும்பத்தில் பிள்ளையே இல்லாத தம்பதிக்கு மூத்த மகனாக வளர்கின்றார். காலம் போக சில பிரச்சனைகளினால் வீட்டை விட்டு வெளியேறும் அருணாச்சலம் பயணத்தில் பல திருப்பு முனைகளை சந்திக்கிறார். இந்நிலையில் அருணாச்சலம் என்ன ஆனார் மீண்டும் அவர் தன்னுடைய வளர்ப்பு குடும்பத்தை சந்தித்தாரா என்பதுதான் கதை.

Advertisement

மாற்றப்பட்ட இயக்குனர் :

முதலில் இப்படத்தை இயக்குனர் பி வாசு இயக்குவதாகத்தான் இருந்தது. இந்நிலையில் வில்லன் கதாப்பாத்திரத்தில் ராதாரவியை வில்லனாக நடிக்க கேட்டிருந்தார் அதற்க்கு அவரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் திடீரென ரஜினிகாந்த அருணாச்சலம் படத்தின் இயக்குனரை மாற்றினார். இதனையடுத்து அப்படத்தில் வில்லன் நடிகராக நடிக்க இருந்த ராதாரவியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

Advertisement

அவமானப்படுத்திய ரஜினிகாந்த் :

ரஜினியுடைய வீட்டிற்கு சென்ற ராதாரவியை காலையிலே மதுபானம் அருந்துவீர்களா என்று கேட்டுள்ளார். இதனையடுத்து பேசிய ரஜினி, அருணாச்சலம் திரைப்படத்தில் ஏற்கனவே மூன்று வில்லன் நடிகர்கள் இருக்கின்றனர் இதனால் நீங்கள் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்காது எனக் கூறியுள்ளார். இப்படி நடிக்கும் நடிகரிடமே இப்படத்தில் உனக்கு வாய்ப்பில்லை என்று கூறினால் அது மிகுந்த வருத்தத்தை தரும் ஆனால் அது எனக்கு நடந்தது.

பிரிவுக்கு காரணம் :

இதனையடுத்தது பேசிய ராதாரவி ரஜினியுடன் சினிமாவில் தலையெழுத்து என்ன தெரியுமா சார் என்று கேட்டேன், அதற்கு அவர் என்னவென்று கேட்டார். நான் ரஜினிகாந்த் அவர்களை சுட்டிக்காட்டும்படி ‘இந்த திறமை’ அதாவது ராதாரவி ‘இந்த அதிர்ஷ்டத்திடம்’ அதாவது ரஜினியை தேடி வரவேண்டியதுள்ளது என்று கூறினேன். தொடக்கத்தில் சிரித்த ரஜினிகாந்த் சிறிது நேரத்தில் அடேங்கப்பா என்று கூறவே நான் புரிந்து கொண்டேன் என் மீது வெறுப்பு ஏற்பத்துவிட்டது என்று ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் இவர் இப்படி சூப்பர் ஸ்டாரை பற்றி பேசிய வீடியோவானது தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement