நாயகி சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் வித்யா. நீச்சல் குளத்தில் கொடுத்த போஸ பாருங்க.

0
10384
vidhya
- Advertisement -

சின்னத்திரை, தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகர் நடிகைகளை உருவாக்கி கொடுத்திருக்கிறது. சந்தானம், சிவகார்த்திகேயன் தொடங்கி பிரியா பவானி ஷங்கர், வாணி போஜன் வரை சின்னத்திரையில் இருந்து வந்த பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். அதே போல ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து வந்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் வந்த கதைகளையும் நாம் அறிவோம்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்’ நாயகி ‘என்ற தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்யா பிரதீப்பும் திரைப்படத்திலிருந்து சீரியல் பக்கம் வந்தவர்தான்.மருத்துவத்துறையில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா நடிப்பில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாகத்தான் சீரியலில் நடிக்கத் துவங்கினார். ஆரம்பத்தில் செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பர மாடலாக நடித்து வந்தார் வித்யா.

- Advertisement -

மேலும், இவரை தமிழில் முதன்முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் ஏ எல் விஜய் தான்.இவரது இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘சைவம்’ படத்தில் வித்யா, தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்திருந்தார். அதன்பின்னர் பசங்க2, ஒண்ணுமே புரியல அச்சமின்றி போன்ற பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் வித்யா.தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நாயகி சீரியலும் குடும்ப ரசிகர்களை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் படத்திலும் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். இவர் மாடல் அழகி என்பதால் நல்ல கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட்களில் இருந்து சில சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நாயகி சீரியலில் இவரை குடும்பப் பாங்கான பெண்ணாக பார்த்த ரசிகர்கள் தற்போது இவரை இப்படி ஒரு கவர்ச்சியான ஆடைகள் பார்த்து வியப்படைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement