சின்னத்திரை சீரியலில் தனது பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சூரி. இவர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி அவர்கள் மதுரை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

இதனால் அனைத்து வித படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், நடிகர்கள் அனைவருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். நடிகர்கள் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை பதிவு செய்து வந்தனர். இதில் நடிகர் சூரி வித்தியாசமாக தனது குழந்தைகளுடன் தினமும் ஒரு கருத்துடன் கூறிய சின்ன வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டார். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

அதனைத் தொடர்ந்து இவர் முடியாதவர்களுக்கு உதவிகள், காவல்துறையினரிடம் ஆட்டோகிராப், பெப்சி அமைப்பு உதவி என பல உதவியை செய்து வருகிறார் சூரி. தற்போது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்துள்ளார் சூரி. மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களை நினைவூட்டும் விதமாக ‘சிரிப்போம் சிந்திப்போம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.

தற்போது உள்ள காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம், விடாமுயற்சி, தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார் சூரி. அதுமட்டும் இல்லாமல் மாணவர்களின் குறும்புத்தனமான கேள்விகளுக்கும் நகைச்சுவையாகப் பதிலளித்தார். இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Advertisement