படமாகிறது நயன்தாராவின் லவ் ஸ்டோரி. எந்த லவ் ஸ்டோரின்னு நீங்களே பாருங்க. அதிகாரபூர்வ அறிவிப்பு.

By Rajkumar · 15/1/2020

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான காதலில் இருந்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதலில் இருந்து பின்னர் அவர்களிடம் இருந்து பிரிந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வருவதும் அனைவருக்கும் தெரியும்.

நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார் சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடினார். மேலும், நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி தற்போது நயன்தாரா நடித்துவரும் மூக்குத்தி அம்மன் படக்குழுவினர் ஆதரவற்ற இல்லங்களில் அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் லவ் ஸ்டோரியை மையாமாக கொண்டு திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.

இதையும் பாருங்க : விஜய் வசந்த் எங்க போனார். தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?

திரி இஸ் ஏ கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தினை கோபி என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்திற்கு நானும் சிங்கிள் தான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கதாநாயகனாக தினேஷ் என்பவரும் கதாநாயகியாக தீப்தி திவேஸ்  என்பவரும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனாக நடிக்க உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தினை நயன்தாராவின் காதலை மையமாக வைத்து தயார் செய்து இருக்கிறாராம் இயக்குனர் கோபி.

படத்தின் ஹீரோ தினேஷ் மற்றும் ஹீரோயின் தீப்தி திவேஸ்

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிக பிரபலமானது. அதனை அடிப்படையாக வைத்துதான் இந்த கதையை தயார் செய்திருக்கிறோம். நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி இப்போது சிலரால் ஆச்சரியமாக பார்க்கும் ஜோடியாக இருந்து வருகிறார்கள். இந்த படத்தில் ஹீரோவின் இலட்சியமே நயன்தாரா போல ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்பதுதான். அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார் அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார் என்று கூறியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full