விஜய் வசந்த் எங்க போனார். தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?

0
30168
vijay-Vasanth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் வசந்த். இவருடைய அப்பா மிகப் பெரிய தொழிலதிபர். அது வேற யாரும் இல்லை. புகழ் பெற்ற வணிக நிறுவனமான வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் தான் நடிகர் விஜய் வசந்த். தற்போது நடிகர் விஜய் வசந்த் அவர்கள் வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவரின் தந்தை வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி தன் தந்தை மிகப் பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சினிமாவில் உயர்ந்து வரும் நடிகர் விஜய் வசந்த்.

-விளம்பரம்-
Vijay Vasanth ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಜನವರಿ 10, 2020

மேலும், நடிகர் விஜய் வசந்த் அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பர் ஆவார். அதனால் இவர் இயக்கிய முதல் திரைப்படமான சென்னை 28 படத்தில் நடிகர் விஜய் வசந்த் நடித்தார். இதன் பின் மீண்டும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது. இந்த படத்திலும் நடிகர் விஜய் வசந்த் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த படம் நாடோடிகள். இந்த படம் மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் வசந்த் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் .

இதையும் பாருங்க : உதவி இயக்குனரா நீ, ரொம்ப துயரமான கேள்விப்பா இது- விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு நக்கல் பதில் அளித்த வெற்றிமாறன்.

- Advertisement -

தளபதி விஜய் நடித்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் பல படங்களில் ஹீரோவாகவும் இவர் நடித்து உள்ளார். பிறகு இவர் அச்சமின்றி, வேலைகாரன் போன்ற பல படங்களில் நடித்தார். பின் சமீப காலமாகவே இவர் சினிமா பக்கம் காணோம். இதனால் பல பேர் பல விமர்சனங்களை எழுப்பினார்கள். தற்போது இவர் “மை டியர் லீசா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து ஏற்பட்டது.

-விளம்பரம்-

இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இவருக்கு காலில் பலமாக காயம் ஏற்பட்டு உள்ளதால் “மை டியர் லீசா” படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தற்போது இவர் குணமாகி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு வசந்த் விஜய் மகிழ்ச்சியடைந்து உள்ளார். அதாவது பல போராட்டங்களைதாண்டி இந்த படத்தின் போஸ்டர் பொங்கலுக்கு அதாவது இன்று ரிலீஸ் ஆவதாக கூறி உள்ளார்.

Advertisement