உதவி நடிகை நயன்தாரா இயக்குனராக வேலை செய்த நயன்தாரா..!அதுவும் இந்த மாஸ் ஹீரோ படத்தில்..!

0
175
nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். கதாநாயகிகளை கமிட் செய்ய நினைக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முதல் முன்னுரிமையாக இருப்பது நடிகை நயன்தாராவின் பெயர் தான்.

அதற்கேற்றார் போல நயன்தாரா நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்தான் என்ற எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வாறு வெளியான படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை நயன்தாரா தமிழில் சரத் குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் தான். ஆனால், அதற்கு முன்பாகவே மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார் நயன்.தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள நயன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

அஜித் நடித்த ‘ஏகன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா உதவி இயக்குனராக நடித்துள்ளார் என்று அந்த படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய சிற்றரசு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை நயன்தாரா ‘அறம்’ படத்தில் கூட உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்று கூட கூறப்படுகிறது