சீரியல் செட்டு, இசை கச்சேரி என்று காதலரின் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடிய நயன் – வீடியோ இதோ.

0
1270
nayanthara
- Advertisement -

இயக்குனரும் நடிகை நயந்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இன்று (செப்டம்பர் 18) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-
View this post on Instagram

❤️🖤

A post shared by nayanthara (@nayantharah) on

மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை. இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடட தனது காதலருடன் தனி விமானத்தில் சென்று இருந்தார் நயன். சமீபத்தில் கூட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கோவாவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாள் சென்றது. இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கோவாவில் உள்ள ஹோட்டலில் கொண்டாடி இருக்கிறார் நயன். அதுவும் சீரியல் பல்ப், இசை கச்சேரி என்று தனது காதலரின் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடியுள்ளார் நயன்.

-விளம்பரம்-
Advertisement