காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா.!

0
1698
vignesh
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் தம்பதிகள் இருந்து வந்தாலும், தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.

-விளம்பரம்-

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். அதே போல என்ன தான் பிஸியாக இருந்தாலும் தனது காதலருடன் தனது நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன்.

- Advertisement -

அதே போல நயன்தாராவும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடம் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் நடிகை நயன்தாரா தனது காதலரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது . என்னதான் தற்போது நயன்தாரா பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தனது காதலருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் பேர்வழியாக இருக்கிறார் நயன். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

-விளம்பரம்-
Advertisement