காதலுருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை துவங்கிய நயன்தாரா..!வைரலாகும் புகைப்படங்கள்..!

0
906
Nayanthara-vignesh-sivan
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர் .மேலும்இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.

-விளம்பரம்-

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர்.இந்நிலையில் இருவரும் சமீபத்தில் ஒன்றாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

இதையும் படியுங்க : நயன்தாராவுடன் திருமணம் எப்போது ..!பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

- Advertisement -

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாராவின் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் கொலையுதிர் காலம் ஆகிய இரண்டு படங்களுமே வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் நயன்தாரா தனது காதலருக்காக நேரம் ஒதுக்கி கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement