தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் “மாயா” என்ற திகில் திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்திருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கைகோர்த்துள்ளார் நடிகை நயன்தாரா. இயக்குனர் அஸ்வின் ஏற்கனவே மாயா, கேம் ஓராவர் போன்ற திகில் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளது.

இப்படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவத்தின் ரவுடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் பிருத்வி சந்திரசேகர் இசையமைத்து, மணிகண்டன் கிருஷ்ணமாச்சரியர் ஒளிப்பதிவாளராகவும், ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தின் முதல் சிங்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிய நிலையில் இன்று திரையரங்கில் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

Advertisement

கதைக்களம் :

வினை ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நயன்தாரா சூசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவர்கள் இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஆன்னா என்ன மகள் இருக்கிறார். ஜோசப் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கொரோன எனும் கொடிய நோய் உலகை தாக்குகிறது. இதனால் ஜோசப் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை அளிக்கும்போது கொரோன தாக்கி இறந்து விடுகிறார்.

தந்தையின் பிரிவை தாங்காத அவரது மகள் ஆன்னா பேய்களுடன் பேசும் ஓஜா பலகையின் மூலம் இறந்த தன்னுடைய தந்தையுடன் பேச முயற்சி செய்கிறார். ஆனால் இந்த முயற்சி விபரீதத்தில் முடிகிறது. இந்த சூழ்நிலையில் இருந்து சூசனும் அவரது மகள் ஆன்னாவும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் மீது கதை.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னரெல்லாம் காமெடி திகில் கதைகளாக எடுக்கப்பட்டது மாறி இப்போது முழுவதுமாக திகிலாக இருக்கிறது. இப்படத்தின் முழு கதையும் ஒரு வீட்டையும் ஐந்து, ஆறு கதாபாத்திரங்களை சுற்றியும் நகர்கிறது. தொடக்கத்தில் விறுவிறுப்பாக நகரும் கதை ஒருகட்டத்தில் படம் ஓடுவதற்கே துணைக்கதை தேவைப்படுகிறது. இருந்தாலும் படம் முழுவதும் ஒரே திகிலாக இருப்பதினால் பார்ப்பவர்களுக்கு திகட்டுகிறது.

Advertisement

இயக்குனர் மொத்த திரைப்படத்தையும் திகிலாக எடுக்க முயற்சி செய்திருந்தாலும் படத்தின் சுருக்கம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. மேலும் திகில் காட்சியை தாண்டி படத்தில் அவ்வப்போது வரும் சென்டிமென்ட காட்சிகள் கதைக்கு ஒற்றாமல் இருக்கிறது. அதோடு ஜோசப் கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதினால் தேவாலயம், கிறிஸ்துவர்கள், பாதிரியார் என்று கதை நகர்ந்தாலும் கிளைமாக்ஸில் மரம் வரப்போம் என்று கதைக்கு சம்மந்தமே இல்லாத கருத்து நயன்தாராவின் 02 திரைபடத்தை நியாபகப்படுத்துவதாக இருக்கிறது என்ற விமர்சனமும் வருகிறது.

கனெக்ட் திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகள் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தில் இடைப்பட்ட காலத்தில் தொய்வு இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அதனை திகில் காட்சிகளில் மூலம் விறுவிறுப்பாகியிருக்கிறார் இயக்குனர். மேலும் இப்படம் கடந்த 30 வருடங்களாக நாம் பார்த்த படங்களை போலத்தான் நகர்ந்தாலும் பின்னணி இசை மற்றும் தொழில்நுட்ப்ப வேலைபாடுகள் மூலம் படத்துடன் ரசிகர்களை ஒன்ற வைத்திருக்கிறார் இயக்குனர்.

திகில் பட ரசிகர்களை பொறுத்தவரை பேய் ஓட்டுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு கனெக்ட் திரைப்படம் ஒன்றும் விலக்கில்லை. படத்தின் சில காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும். அதிக காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் விறுவிறுப்பாகவே இருக்கிறது. மேலும் இப்படத்தில் திகிலூட்டும் காட்சிகளில் தீய சக்திகளை காட்சி படுத்தியிருப்பது, இணையத்தில் பேய் ஓட்டுவது போன்றவை மிகவும் நாற்றாகவே இருக்கிறது. 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படமானது திகில் பட ரசிகர்களுக்கு மிகவும் ஏற்றது. கண்டிப்பாக ஒரு முறை இப்படத்தை திகில் விரும்பிகளில் பார்க்கலாம்.

நிறை :

ஒளிப்பதிவு மற்றும் லைட்னிங் மிகவும் அருமையாக இருந்தது.

அதோ போல பேய் சப்தங்கள் மிகவும் திகிலாக இருந்தது.

நயன்தாரா, வினை, சாத்தியராஜின் நடிப்பு அருமையாக இருந்தது.

நிச்சயமாக பேய் பட விரும்பிகளுக்கு பிடித்த திரைப்படம்.

குறை:

படத்தின் பெயரில் பிரச்னை இருக்கிறது.

பல காலங்களாக பார்த்த அதே பேய் கதைதான் இதிலும் இருக்கிறது.

திகில் காட்சியை தவிர மற்ற காட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை.

கிளைமாக்ஸ் காட்சிகள் சரியாக பொருந்தவில்லை.

மொத்தத்தில் நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் சரியாக கனெக்ட் ஆகவில்லை.

Advertisement