காதலனுக்காக இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ள நயன். அப்போ விரைவில் கெட்டிமேளம் தான்.

0
98319
nayanthara
- Advertisement -

இன்றைய தமிழ் சினிமா உலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமா திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இந்த ஒரு படத்திலேயே நயன்தாரா அவர்கள் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். மேலும்,2005 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. அதுமட்டுமில்லாமல் இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றும் அழைக்கிறார்கள்.

-விளம்பரம்-
Image result for vignesh shivan nayan"

தற்போது நயன்தாரா அவர்கள் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முதலில் நயன்தாரா அவர்கள் கவர்ச்சி தோற்றத்தில் நடித்து வந்து இருந்தாலும் தற்போது அதையெல்லாம் விடுத்து கதைக்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும்,நயன்தாரா அவர்கள் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இளம் நடிகர்கள் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை அனைவரிடமும் நடித்துள்ளார் நயன்தாரா. இதனைத்தொடர்ந்து நயன்தாரா அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். இவர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்தவர். இவருடைய பிறப்பின் படி இவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்.

இதையும் பாருங்க : நீச்சல் குளமே சூடாகும் வகையில் போட்டோஷூட் நடத்திய அனுபமா. வீடியோ இதோ.

- Advertisement -

பின்னர் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாகவும்,சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் நடன மாஸ்டர் பிரபு தேவாவுடன் ஏற்பட்ட காதலின் காரணமாகவும் நயன்தாரா அவர்கள் தன்னுடைய மதமான கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். மேலும்,கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் சென்னையில் உள்ள ஆரிய சாம்ராஜ் கோவிலில் இந்து மதம் மாறினார். இதனைத்தொடர்ந்து நடிகர் பிரபுதேவாவுக்கும்,
நயன்தாராவுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தார்கள். மீண்டும் நயன்தாரா அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு திரும்பினார். அவர் அடிக்கடி சர்ச் மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு சென்று வந்தார் என்ற தகவலும் வந்துள்ளது.

Image result for vignesh shivan nayan"

இந்த நிலையில் தற்போது நயன்தாரா அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும், இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலையும் அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் நயன்தாரா அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்திலேயே மட்டும் இருக்கப் போவதாகவும், விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் பிறந்த மதத்தில் இருந்து இந்து மதம் திரும்பிய பல நடிகைகள் உள்ளனர். அந்த வரிசையில் குஷ்பு, சமந்தா உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது நடிகை நயன்தாரா இணைந்துள்ளார். மேலும் ,நடிகை நயன்தாரா,இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Advertisement