ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன் அடித்த கூத்து. வைரலாகும் Throwback Video.

0
1648
nayan
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். தமிழில் இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா அவர்கள் நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாகவே நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.

-விளம்பரம்-
View this post on Instagram

ഞാൻ മുങ്ങി ?

A post shared by Aju Varghese (@ajuvarghese) on

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்திலும் இவருடைய நடிப்பு சும்மா கிழி. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் கியூட்டான வீடியோவை அஜுவர்கீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா அவர்கள் கடைசியாக நடித்த மலையாளப் படம் love action drama . இந்த படத்தை இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நிவின்பாலின் கதாநாயகனாக நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவின் க்யூட்டான, அழகான ரியாக்ஷனை பதிவிட்டு உள்ளார். அதில் நயன்தாரா சிரிக்கும் அழகான வீடியோவை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகமாக பகிரந்து வருகிறார்கள். தற்போது நயன்தாரா அவர்கள் ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து முக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இதனை தொடர்ந்து நெற்றிக்கண் என்ற படத்திலும் நயன்தாரா அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement