லிப் பால்ம் பிஸ்னஸ்ஸை தொடர்ந்து 100 கோடி முதலீட்டில் அடுத்த பிஸ்னஸ் – இதுக்கு தான் New Yearக்கு அந்த நாட்டுக்கு போய்ட்டு வந்தாரா ?

0
335
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நயன்தாரா. சமீபகாலமாகவே இவர்கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றது. மேலும், நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமாவின் உச்ச நடிகையாக நயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார்.

-விளம்பரம்-
Nayanthara enters beauty retail space; launches gender-neutral lip care  products- The New Indian Express

தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நயன்தாரா படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்தா படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி நயன் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். நடிகை நயன்தாரா ஏற்கனவேய அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் கால் தடம் பதித்திருக்கிறார். தீ லிப் பாம் கம்பெனி என்று தன்னுடைய நிறுவனத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்.

- Advertisement -

நயனின் லிப் பால்ம் பிஸ்னஸ் :

மேலும், இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் இணைந்து துவங்கியுள்ளார். அழகு சாதனப் பொருள்களில் முக்கிய அங்கம் வகிப்பது லிப் பாம். இதை மட்டுமே இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதுகுறித்து நயன்தாரா கூறியிருப்பது, சரும பராமரிப்பு பொருட்களை பொருத்தவரை நான் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது இல்லை. பொதுவாக நான் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் நான் எதிர்பார்ப்பது பாதுகாப்பு மற்றும் நல்ல ரிசல்ட் தான்.

South star Nayanthara launches The Lip Balm Company - EasternEye

எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் எந்த ஒரு பிரச்சனையும் விளைவுகளும் இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். பின் நயன்தாராவை தொடர்ந்து இந்த லிப் பாம் பிசினஸில் இணைந்துள்ள ரெனிட்டா ராஜன் கூறியிருப்பது, ஆரம்பத்தில் மிகவும் மென்மையான உதடுகளை பாதுகாக்கும் சிறந்த லிப் பாம் உருவாக்க தான் நாங்கள் திட்டமிட்டோம். பின் படிப்படியாக வளர்ந்து ஒரு தனித்துவமான தயாரிப்பை உருவாக்க முடிவு செய்தோம். அதனுடைய வெளிப்பாடுதான் தீ லிப் பாம். உதடுகளை மேம்படுத்தி மென்மையாக்குவது மட்டுமில்லாமல் அவற்றை பளபளப்பாகவும் மாற்றும்.

-விளம்பரம்-

பிஸினஸ் வுமன் ஆகவே மாறிக் கொண்டு வரும் நயன் :

அதை மனதில் கொண்டு தான் எங்களுடைய லிப் பாம் தயாரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி இருக்கிறோம். எங்களுடைய லிப் பாம் நவீனமாகவும், முற்றிலும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கிறோம் என்று கூறி இருக்கிறார். இதுமட்டுமில்லாமல் நடிகை நயன்தாரா சமீபத்தில் சென்னையை சேர்ந்த Chai Waale என்ற நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். இப்படி இப்போது நயன்தாரா முற்றிலுமாகவே பிஸினஸ் வுமன் ஆகவே மாறிக் கொண்டு வருகிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

100 கோடி முதலீட்டில் அடுத்த பிஸ்னஸ் :

இந்த நிலையில் தற்போது துபாயில் ரூபாய் 100 கோடி முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் செய்ய நயன்தாரா முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான ஆலோசனை நடத்தவே கடந்த புத்தாண்டு தினத்தின் போதும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவர் துபாய் நாட்டுக்கு சென்றதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆக, சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர் என்று செயல்பட்டு வரும் நயன்தாரா தற்போது பல பிசினஸ்களிலும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்.

Advertisement