எப்பா, இதுக்கு போய் இவ்வளவு டென்ஷனா ? சட்டன மாறிய நயன் முகம். ஏன்னு பாருங்க

0
1348
Nayanthara
- Advertisement -

பொதுவாக நடிகர்கள் சிலர் தங்கள் பணத்தை மீண்டும் சினிமாலவிலேயே முதலீடுசெய்வார்கள் . நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி போன்றவர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்கள். ஆனால், நயன்தாரா போன்ற ஒரு சில நடிகைகளை தவிர இந்த ரிஸ்க்கை எடுப்பது இல்லை. அதற்கு மாறாக, பெரும்பாலும் நடிகைகள் தங்களுடைய சம்பாத்தியத்தை முழுவதும் சொத்துக்கள் ஆகவும், ரியல் எஸ்டேட் மீதும் முதலீடு செய்வார்கள். அதோடு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு வாங்கி விடுகிறார்கள். நகை கடை, திருமண மண்டபம் என்று பல வகைகளில் தங்களுடைய முதலீடுகளை போட்டு தொழில் நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகள் சினிமாவை தவிர என்ன தொழில் செய்கிறார்கள். இதில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது போக கடந்த 2021 ஆம் ஆண்டு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினர் நயன்.

- Advertisement -

இதன் முதற்கட்டமாக Lip Balm Company என்று லிப்ஸ்டிக் பொருளை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினார். மேலும், இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் இணைந்து துவங்கினார். தற்போது நயன்தாரா 9skin என்ற அடுத்த நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். இதில் சருமத்திற்கு தேவையான அழுகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார்.

மேலும், இந்த நிறுவனத்தை வரும் 29ஆம் தேதி துவங்கஇருப்பதாக அறிவித்து இருந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் ‘ ஆறு வருட அயராத முயற்சியையும் அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் சூத்திரங்களுடன், உங்களைப் போலவே தனித்துவமான தயாரிப்புகளைக் குணப்படுத்துவதில் நாங்கள் எங்கள் இதயங்களைச் செலுத்தியுள்ளோம்.

-விளம்பரம்-

மேலும் உங்கள் சுய பாதுகாப்பு வழக்கத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுய காதல் பயணத்தில் எங்களுடன் இணைந்து ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்திற்கு வணக்கம் சொல்லுங்கள்! நாங்கள் @9SKINOfficial ஐ அறிமுகப்படுத்துகிறோம். நீங்கள் தகுதியான சுய அன்பின் உழைப்பு இப்போது கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஏனென்றால் சுய அன்பு மட்டுமே நமக்குத் தேவை என்று நாங்கள் நம்புகிறோம்.

அற்புதமான தோல் பராமரிப்பு அனுபவத்திற்கு தயாராகுங்கள்! என்றும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து 9skin நிறுவனத்தின் அடுத்தடுத்த பொருட்களை அறிமுகம் செய்தார் நயன். இப்படி ஒரு நிலையில் 9ஸ்கின் பிராண்டின் அறிமுக விழா மலேசியா கோலாலம்பூரில் நடந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு நயன்தாரா சென்ற போது அவரது ஆடையை தெரியாமல் ஒருவர்மிதித்து விட்டார் இதனால் உடனே சட்டென திரும்பி ஒரு முறை முறைத்தார் நயன்தாரா. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ நயன்தாராவுக்கு இவ்வளவு கோபமா என்று வருமா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement