அத மட்டும் என் வாழ்க்கைல Rewind பண்ணிட்டேன்னா – தந்தை குறித்து கலங்கிய நயன். வைரலாகும் வீடியோ.

0
11645
nayanthara
- Advertisement -

சமீபத்தில் நெற்றிக்கண் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா தனது தந்தையின் நிலையை சொல்லி கண்ணீர் விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர்.

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். தற்போது நடிகை நயன்தாரா, நெற்றிக்கண் படத்தில் நடித்து உள்ளார். இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடித்துவிட்டதாக கூறி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தனது தந்தையின் நிலை குறித்து கூறி கண்ணீர் விட்டுள்ளார் நயன். அந்த ப்ரோமோவில், என் தந்தைக்கு 12 13 வருடங்களாகவே உடல்நிலை சரியில்லை நான் தற்போது இப்படி இருக்கிறேன் என்றால் அது அனைத்தும் என் தந்தையிடம் இருந்து வந்ததுதான் அவர் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் என் அப்பாவின் விஷயத்தில் மட்டும் அவர் முன்பு எப்படி இருந்தாரோ அப்படி என்னால் மாற்றி அமைக்க முடியவில்லை.

நடிகை நயன்தாராவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா..? - முதல் முறையாக  இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..! - Cinefeeds

அது மட்டும் என்னால் மாற்றி அமைக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நடிகை நயன்தாராவின் தந்தையின் உடல் நிலை மோசமாக மாறியதால் அவரை நேரில் சந்திக்க சென்றார் நயன். அப்போது அவர் தனது மகளை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் தான் நயன்தாரா விக்னேஷ் சிவனை நிச்சயம் முடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement