சினிமாவை பொறுத்த வரை நடிகைகள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்பது சாதாரணமான விடயம் அல்ல. ஆனால், தென்னிந்திய சினிமா திரை உலகில் பல ஆண்டிகளாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். மேலும்,நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். மேலும்,ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள்.

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர், தமிழ் மொழியில் மெஹா சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

இதையும் பாருங்க : உண்மையில் சமந்தா பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டாரா ? வைரலாகும் சமந்தாவின் பழைய வீடியோ.

Advertisement

நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு குடும்பபாங்கான தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். அப்படி இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்து விடுகிறது. இறுதியாக விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த நயன் தற்போது சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை நயன்தாராவிற்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி தலைப்பில் ‘ஸ்ரீதேவி அவார்டு’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் அளித்தார்.

Advertisement

இந்த விருதினை வழங்கிய பின்னர் போனி கபூர் பேசுகையில் நயன்தாராவின் பெயருக்கு அர்த்தம் என்ன என்பதை கூறியிருந்தார். அப்போது பேசிய அவர், தாரா என்றால் ஹிந்தியில் நட்சத்திரம் (Star) என்று அர்த்தம். அதனால் இந்த விருதுக்கு நயன்தாரா தகுதியானவர் தான் என்று கூறியிருந்தார். ஏற்கனவே நடிகை நயன்தாரா போனி கபூர் வைத்த விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement