உண்மையில் சமந்தா பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டாரா ? வைரலாகும் சமந்தாவின் பழைய வீடியோ.

0
29002
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் ஒரு உருமாதிரி கலைஞரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து வருகிறார். 2007ம் ஆண்டு இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார். ஆனால், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்து இருந்தார். இந்த படத்தில் இருந்து தான் நடிகை சமந்தா மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் தமிழ் சினிமாவில் இவர் பானா காத்தாடி, நான் ஈ, கத்தி, மெர்சல், தெறி, தங்க மகன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
https://www.facebook.com/watch/?v=666648723824875

அதோடு நடிகை சமந்தா அவர்கள் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். நடிகை சமந்தா அவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமந்தா அவர்கள் சமீபகாலமாகவே வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனி ஹீரோயினாகவும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். பின் இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு இவர்களுடைய கோவாவில் கோலாகலமாக கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடந்தது. நடிகை சமந்தா அவர்கள் திருமணத்திற்கு பிறகும் எந்த ஒரு தடையும் இல்லாமல் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த “இரும்புத்திரை” படம் மிகப் பெரிய அளவு வெற்றி தந்தது. அதற்கு பிறகு இவர் சீம ராஜா, யூ-டெர்ன், ஓ பேபி போன்ற படங்களில் நடித்து உள்ளார். சினிமா உலகில் நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது சாதாரண ஒன்றாக மாறி விட்டது. தற்போது வரும் காலங்களில் இந்த அறுவை சிகிச்சை அதிகமாகி கொண்டே உள்ளது. அந்த வகையில் நடிகை சமந்தா அவர்களும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்னர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை சமந்தா அவர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து உள்ளார் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆதாரமற்ற வதந்தி பரவியது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு முன்னர் நடிகை சமந்தா அவர்கள் நடித்த விளம்பர படங்களை பார்த்தால் இது சமந்தாவா? என்று வியக்கும் அளவிற்கு அவருடைய முகம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் பல பேர் இவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவு உள்ளார் என்றும் இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் கமன்ட் செய்து உள்ளார்கள். தற்போது இவர் திரை படங்களில் நடிப்பதற்கு முன் நடித்த விளம்பர படங்கள் இணையங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இது சமந்தாவா என்று அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.ஆனால், சமந்தா பிளாஸ்டிக் சார்ஜரை செய்து கொண்டதாக கூறப்படுவது போலியான தகவல் என்று தான் கூறப்படுகிறது.

Advertisement