அனைத்தும் விக்கி பெயரில் தான் – இப்போ புதிதாக இந்த பிசினஸ்ஸையும் காதலன் பெயரில் ஆரம்பித்துள்ள நயன்

0
4605
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.

-விளம்பரம்-
nayanthara

சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது.இதுகுறித்து விளக்கமளித்த விக்னேஷ் ஷுவான் இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம்.

இதையும் பாருங்க : எதுக்கு இவ்ளோ கேவலமா ட்ரெஸ் போட்ற – சித்தி 2 நடிகையின் வீடியோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

அதேபோல இப்போது எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அந்த லவ் நல்லா இருக்கிறது.அந்த காதல் போர் அடித்து விட்டால் திருமணம் செய்துகொண்டுகொள்வோம் என்று கூறி இருந்தார். நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை தாங்கு தாங்குனு தாங்குகிறார். இப்படி ஒரு நிலையில் ”சாய் வாலே’ எனும் டீ நிறுவனத்தில் ஏஞ்சல் இன்வெஸ்ட்டராக தன் காதலன் விக்னேஷ் சிவன் பெயரில் பண முதலீடு செய்திருக்கிறது நயன்தாரா.

கடந்த பல ஆண்டுகளாகவே விக்னேஷ் சிவனுடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நயன்தாரா எல்லா முதலீடுகளையும் விக்னேஷ் சிவனின் பெயரில் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார். வீடு, கார், நிலம் என அவர் வாங்கும் எதுவாக இருந்தாலும் விக்னேஷ் சிவனின் பெயரிலேயே அதைப் பதிவு செய்து இருக்கிறாராம் நயன். தற்போது இந்த டீ பிஸினஸ்சையும் காதலன் பெயரில் முதலீடு செய்துள்ளார். பெரும்பாலும் சென்னையில் மலையாளிகள் தான் டீ கடையை வைத்து உள்ளனர். தற்போது டீ பிஸினஸ்ஸில் முதலீடு செய்து தானும் ஒரு மலையாளி என்று நிரூபித்துள்ளார் நயன்.

-விளம்பரம்-

Advertisement