நயன்தாரா குறித்து அறிவிப்பை வெளியிட்ட தர்பார் படக்குழு.! ரசிகர்கள் குஷி.!

By Rajkumar · 23/4/2019

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இப்படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத்.

https://twitter.com/LycaProductions/status/1120522874362765313

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினி மும்பையில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

இதையும் படியுங்க : தனது இயக்குனரிடம் மருமகனுக்கு ஹீரோ வாய்ப்பு.! சிபாரிசு செய்த ரஜினி.! 

இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள நயன்தாரா இன்று (ஏப்ரல் 23) மும்பையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த தகவலை இந்த படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை நயன்தாரா தற்போது விஜய் நடித்து வரும் விஜய் சேதுபதி 3 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல சூப்பர்ஸ்டாருடன் ஏற்கனவே சந்திரமுகி குசேலன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full