13 வருடங்களாக உடல் நிலை சரியில்லாத தனது தந்தையுடன் நயன்தாரா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

0
1385
nayan
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையுடன் நயன்தாரா எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் – நயன்தாரா :

இப்படி ஒரு நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவிடம், அவர் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார். தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை. ஆனால், நிச்சம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்.

தனது தந்தைக்கு இருக்கும் குறை :

அதே போல இதே நிகழ்ச்சியில் ‘டிடி நயன்தாராவிடம், உங்களுக்கு வாழ்க்கையில் பின்னோக்கி சென்று எதாவது ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டால் என்ன மாற்றுவீர்கள் என்று கேட்டு இருந்தார்’ இதற்கு பதில் அளித்த நயன்தாரா ‘என் குடும்பத்தை பற்றி நான் பெரிதாக பேசுவது கிடையாது. அவர்கள் ஒரு தனி உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். என் அப்பா பற்றி கூட நான் பெரிதாக பேசியது இல்லை.

-விளம்பரம்-

தந்தை குறித்து கலங்கிய நயன் :

அவர் ஒரு ஏர் போர்ஸ் ஆபிஸர், என் தந்தைக்கு 12 13 வருடங்களாகவே உடல்நிலை சரியில்லை நான் தற்போது இப்படி இருக்கிறேன் என்றால் அது அனைத்தும் என் தந்தையிடம் இருந்து வந்ததுதான் அவர் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் என் அப்பாவின் விஷயத்தில் மட்டும் அவர் முன்பு எப்படி இருந்தாரோ அப்படி என்னால் மாற்றி அமைக்க முடியவில்லை.அது மட்டும் என்னால் மாற்றி அமைக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

குடும்பத்துடன் நயன் :

சொல்லப்போனால் உடல் நலன் சரியில்லாமல் இருக்கும் தனது தந்தை தனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டதால் தான் நயன்தாரா நிச்சயதார்த்தத்தை முடித்தார் என்றும் கூறப்பட்டது. அதே போல பொதுவாக நயன்தாராவின் குடும்ப புகைப்படங்கள் வெளியானால் அதில் அவர் தந்தை இருக்க மாட்டார். இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் பிறந்த நாளில் பல ஆண்டுகள் கழித்து தன் அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.

Advertisement