முட்டாள்களுடன் வாதம் செய்தால் – செம்பருத்தி சர்ச்சைக்கு பின் ஆதாரத்துடன் நயன் போட்ட பதிவு

0
417
- Advertisement -

தன் மீது குற்றம் சாட்டியிருந்த மருத்துவருக்கு நயன்தாரா கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாகி உள்ளது. நயன்தாரா அவர்கள் செம்பருத்தி டீ உடம்புக்கு ரொம்ப நல்லது. அவர் தினமும் செம்பருத்தி டீ குடித்து வருவதாக தெரிவித்து இருந்தார். அதோடு அந்த டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டு பகிர்ந்து இருந்தார் நயன்தாரா. அதை தொடர்ந்து இந்த டீயை தனக்கு பரிந்துரை செய்தவரையும் டேக் செய்து, ரெசிபி வேண்டுமென்றால் அவரிடம் கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார் நயன்.

-விளம்பரம்-

இந்தப் போஸ்ட்டை பார்த்த நயனின் ரசிகர்கள் சூப்பர் தகவல், நாங்கள் கண்டிப்பாக ட்ரை பண்ணுகிறோம் என்று நயனை பாராட்டி பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் தான் நயன்தாராவின் போஸ்ட்டை பார்த்த மருத்துவர் லிவர் டாக் அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்திருந்தார். அதில், நடிகை சமந்தாவை விட அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் சினிமா நடிகை நயன்தாரா. தன்னைப் பின்தொடரும் 8.7 மில்லியன் பாலோயர்களுக்கும் செம்பருத்தி டீ குறித்து தவறான அறிவுரையை கொடுத்துள்ளார்.

- Advertisement -

லிவர் டாக் பதிவு:

செம்பருத்தி டீ சுவையானது என்பதுடன் அவர் நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், ஆரோக்கியம் பற்றி தனக்கு தெரியாத அட்வைஸ் எல்லாம் அவர் பகிர்ந்திருக்கிறார். மேலும், நயன்தாராவின் பதிவை பார்த்தால் டயட் மற்றும் நியூட்ரிஷினில் மாஸ்டர்ஸ் டிகிரி வைத்திருக்கும் தனது செலிப்ரிட்டி பிரண்டுக்கு விளம்பரம் கொடுக்க போஸ்ட் போட்டது போல தெரிகிறது. செம்பருத்தி டீ தினமும் குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நயன் குறித்த விமர்சனம் :

அந்தப் போஸ்டில் சர்க்கரை நோய்க்கும், ரத்த அழுத்தத்திற்கும் செம்பருத்தி டீ நல்லது என்று நயன்தாரா கூறியுள்ளார். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். செம்பருத்தி டீ தினமும் குடிப்பதால் ஆண்களின் டெஸ்டிஸ் பாதிக்கப்படும். அதேசமயம், பெண்கள் அந்த டீயை தினமும் குடித்து வந்தால் பூப்பெய்வது தள்ளிப் போகும். முக்கியமாக ரீப்ரொடக்டிவ் வயதில் இருக்கும் ஆண்களும், பெண்களும் செம்பருத்தி டீயை தினமும் குடிக்கவே கூடாது.

-விளம்பரம்-

போஸ்ட்டை டெலிட் செய்த நயன்:

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உண்மையான டாக்டர்களின் அறிவுரையை கேளுங்கள். கடைசியாக, இதை சொல்வதில் நான் ரூடாக இல்லை என்று நினைக்கிறேன். ரசிகர்கள் அதிகம் உள்ளவர் என குறிப்பிட்டுள்ளார். இப்படி டாக்டர் லிவர் டாக் செய்த விமர்சனத்திற்கு பிறகு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து செம்பருத்தி டீ குறித்த போஸ்டை டெலிட் செய்துள்ளார். அதோடு சமீபத்தில், நெபுலசரை பரிந்துரைத்த சமந்தா செய்தது தவறு என்று குறிப்பிட்டு பேசி இருந்தார் லிவர் டாக்.

நயன் பதிவு:

தற்போது நயன் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஸ்டோரி ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், முட்டாள்களுடன் ஒருபோதும் வாதிடாதீர்கள். அவர்கள், உங்களை அவர்களுடைய நிலைக்கு இழுத்துச் செல்வார்கள். உங்களை தோற்கடிக்கவும் நினைப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும், செம்பருத்தி டீயின் பயன்களையும், ரெசிப்பியும் பகிர்ந்துள்ளார். தற்போது நயன் பதிவு தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Advertisement