நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்.! கிழவி, ஆண்டி என்று கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!

0
42894
Nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். கதாநாயகிகளை கமிட் செய்ய நினைக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முதல் முன்னுரிமையாக இருப்பது நடிகை நயன்தாராவின் பெயர் தான்.

அதற்கேற்றார் போல நயன்தாரா நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்தான் என்ற எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வாறு வெளியான படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க நடிகை நயன்தாரா கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். சொல்லப்போனால் ஒரு சில தமிழ் ஹீரோக்களும் இணையாக நயன்தாரா சம்பளம் வாங்குகிறார். இது ஒரு புறம் இருக்க நயன்தாராவிற்கு 34 வயதாகிறது.

-விளம்பரம்-

இருப்பினும் இந்த வயதிலும் மிகவும் இளமையான தோற்றத்தில் இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. இந்த நிலையில் நயன்தாரா ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் சிலர் நயன்தாராவை கிழவி என்றும் ஆண்டி என்றும் கினலடித்துள்ளனர்.

Advertisement