கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது.இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
View this post on Instagram
இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.மேலும், நேற்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி- சூர்யா இருவரும் இணைந்து மிக்ஜாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட ஒரு சில பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பண உதவி செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் நயன்தாரா நடத்தி வரும் femi9 என்ற மாதவிடாய் பேட் பிராண்ட் சார்பாக வேளச்சேரி கைவேலி பாலம் அருகில் மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணம் என்ற பெயரில் மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூடவே பெண்களுக்கு நயந்தாராவின் femi9 பிராண்டின் சானிட்டரி பேட்களும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வீடியோ கண்ட பலர் பாராட்டினாலும, உங்கள் பிராண்ட்டை விளம்பரம் செய்யும் நேரம் இது தானா? என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் கையில் சானிட்டரி பேட் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு பெண்கள் கையில் femi9 சானிட்டரி பேட் கொடுத்து போஸ் கொடுக்க வைத்தும் இருக்கின்றனர். இதெற்கெல்லாம் மேலாக அந்த வீடியோ முடிவில் பெண்களின் தேவை femi9 என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டி பலரும் உங்களின் மார்க்கெட்டிங் யுத்தியை பாராட்டுகிறோம் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோவை Femi9 என்ற பக்கத்தில் போஸ்ட் செய்யப்பட்டு விக்னேஷ் சிவனை மட்டும் தான் டேக் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் மட்டும் தான் பகிர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






