தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நயன் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

இதையும் பாருங்க :லிப் லாக் காட்சிகளுக்கு ஒப்பந்தத்தில் முடிவே முடியாது என்று குறிப்பிட்டுள்ள தமன்னா. ஆனால், இந்த நடிகர் மட்டும் ஓகேவாம்.

இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார் மேலும் அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறாராம் நடிகை நயன் இந்த விஷயம் உண்மையா பொய்யா என்று ரசிகர்கள் குறைந்த நிலையில் இதனை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் போது செய்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

Advertisement

நயன்தாரா இதுபோன்ற விரதம் இருப்பது முதல் முறை அல்ல ஏற்கனவே தெலுங்கில் கடந்த 2011ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்த நயன்தாரா அந்த படம் தொடங்கப்பட்டதிலிருந்து அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து வந்தார் இப்படி படத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்து வருவதாலோ என்னவோ இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Advertisement

நடிகை நயன்தாரா ஏற்கனவே தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்திற்காக சிறந்த காமெடியன் என்ற விருதை பெற்ற ஆர்ஜே பாலாஜி மேடையில் பேசும்போது நயன்தாரா தன்னுடைய சகோதரி என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இவர்கள் இருவரும் வேலைக்காரன் படத்திலும் நடித்திருந்தனர். இந்தநிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் மீண்டும ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்திருக்கிறார் நடிகை நயன்தாரா. ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்த எல்கேஜி திரைப்படம் சமூக கருத்துக்களை கொண்ட படமாக அமைந்தது இந்தப் படமும் அதை போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது விரைவில் இந்த படத்தைக் காண பணிகளும் துவங்க இருக்கிறது.

Advertisement