நடிகை நயன்தாரா படித்த பள்ளி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகையை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

இதையும் பாருங்க : ‘சந்திரமுகிலேயே உங்க மாமாக்கு நான் சொல்லிக் கொடுத்தேன், நீ என்ன’ – படிக்காதவன் படத்தில் இருந்து வடிவேலு வெளியேறியுள்ள காரணம்.

Advertisement

நயன் நடிக்கும் படம்:

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், காட்ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா திருமணம் நடந்து முடிந்தது.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான்.

Advertisement

திருமணத்திற்கு பின் விக்கி-நயன்:

மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக கோயிலுக்கு சென்று இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று இருந்தார்கள். அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. தற்போது இருவரும் படப்பிடிப்பின் வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை நயன்தாரா படித்த பள்ளி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

நயன்தாரா படித்த பள்ளி:

அதாவது, நடிகை நயன்தாராவின் சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருவல்லா என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அங்கிருக்கும் O.E.M என்ற பப்ளிக் பள்ளியில் தான் நயன்தாரா படித்து இருக்கிறார். மேலும், நடிகையான பின்னர் அந்த பள்ளியில் தனக்கு பிடித்த நபர் உடன் நயன்தாரா புகைப்படம் எடுத்து இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement