‘சந்திரமுகிலேயே உங்க மாமாக்கு நான் சொல்லிக் கொடுத்தேன், நீ என்ன’ – படிக்காதவன் படத்தில் இருந்து வடிவேலு வெளியேறியுள்ள காரணம்.

0
1053
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் காமெடி கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. சோசியல் மீடியா என்றாலே இவருடைய காமெடியும், புகைப்படங்களும் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. 24 ஆம் புலிகேசி பட பிரச்னையால் சில ஆண்டுகளாக சினிமாவில் தடை பெற்று இருந்த வடிவேலு தற்போது மீண்டும் நடிக்கத்துவங்கி இருக்கிறார். தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலு. மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கூட சமீபத்தில் தான் வெளியானது.

-விளம்பரம்-

வடிவேலு சினிமாவில் உள்ள பல நடிகர்களுடன் விருத்தம் சம்பாதித்து வைத்து இருக்கிறார். இவருடன் பல காமடிகளில் நடித்த சிங்கம் புலி துவங்கி வெற்றிக்கொடி கட்டு பெஞ்சமின் வரை இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி கடுமையாக நடந்துகொள்வார் என்பதை கூறி இருக்கின்றனர். இதனாலேயே வடிவேலு பல படங்களில் இருந்து பாதியில் வெளியேறி இருக்கிறார். அந்த வகையில் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் கூட வடிவேலு பாதியில் வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : 20 வருட போராட்டம், கைகொடுக்காத சினிமா – திருமணம் கூட செய்யாமல் இப்படி ஒரு வேலையை செய்து வரும் அருவி பட நடிகர்.

தனுஷின் படிக்காதவன் :

மாப்பிள்ளை, படிக்காதவன் என்று தனது மாமனார் ரஜினியின் பட டைட்டில்களை வைத்து நடிகர் தனுஷ் வரிசையாக படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘படிக்காதவன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தனுஷ் தமன்னா, விவேக் நடித்த இந்த படத்தில் விவேக் முழு நீள காமெடி ரோலில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

விவேக்கிற்கு முன் நடித்த வடிவேலு :

இந்த படத்தின் விவேக் மற்றும் தனுஷின் காமெடி மிகவும் பிரமாதமாக அமைந்தது. அதன் பின்னர் இவர்கள் இருவர் கூட்டணியில் பல படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், நடிகர் விவேக் நடித்த அந்த காதா பாத்திரத்தில் முதன் முதலில் காமெடி நடிகர் வடிவேலு தான் நடித்திருந்தாராம். இந்த படத்தில் நடிகர் வடிவேலு விவேக் கதாபாத்திரத்தில் இரண்டு நாட்கள் கூட நடித்து முடித்து விட்டாராம். அதன் பின்னர் இந்த படத்தில் இயக்குனர் சுராஜிடம் தனக்கு காட்சிகளை அதிகமாக வைக்குமாறு கேட்டுள்ளார்.

வடிவேலு விலக காரணம் :

அதற்கு சுராஜ் மறுக்கவே இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம் வடிவேலு. அதன் பின்னர் தான் வடிவேலுவுக்கு பதிலாக விவேக்கை கமிட் செய்துள்ளனர். இதுவரை தனுஷ் மற்றும் வடிவேலு ஓரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. ஒருவேளை இந்த படத்தில் நடித்திருந்தால், வடிவேலுவை தான் தற்போது தனது படங்களில் தனுஷ் காமெடியனாக போட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. மேலும், இந்த படத்திற்கு பின்னர் தான் விவேக் மற்றும் தனுஷ் கூட்டணியில் பல்வேறு படங்கள் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோவில் 2 நிமிடத்தில் பார்க்கவும்

மீசை ராஜேந்திரன் சொன்ன காரணம் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து வடிவேலு வெளியேறியதற்கான காரணம் குறித்து அந்த படத்தில் நடித்த மீசை ராஜேந்திரன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தின் போது இயக்குனர் சொன்னதை வடிவேலு கேட்காததால் தனுஷ், வடிவேலுவிடம் ‘அண்ணே டைரக்ட்டர் சொன்னதை கேளுங்க அண்ணே’ என்று சொன்னதால் வடிவேலு கடுப்பாகி சண்டையிட்டு இருக்கிறார்.

Advertisement