காதலருடன் அத்திவரத்தை தரிசிக்க சென்ற நயன்.! பத்தர்கள் செய்த செயலால் பரபரப்பு.!

By Rajkumar · 15/8/2019

கடந்த ஒரு மாத காலமாக அத்திவரதர் தான் பக்த கோடிகளின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1ம் தேதி எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அத்திவரதரை தரிசிக்க பல லட்ச பக்த கோடிகள் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் அத்திவரதர் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். நேற்று கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் அத்திவரதரை தரசிப்பதற்கு வந்தனர்.

இதையும் பாருங்க : உங்களை வெறுக்கிறோம்.! தர்ஷனுக்கு ஆதரவு தெரிவித்த காதலிக்கு கமன்ட் செய்த ரசிகர்கள்.! அவரின் பதிலை பாருங்க.! 

அத்தி வரதர் தரிசனம் முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அத்திவரதரை நேரில் சென்று தரிசித்தார். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 15 ) லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனிடம் என்று அத்திவரதரை தரிசித்தார்.

https://twitter.com/Nayan_Addict/status/1161872973348786176

நயன்தாராவை கண்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளோம் என்பதையே மறந்து விட்டு ஆளாளுக்கு கையில் செல்போனை எடுத்து வீடியோ எடுக்க துவங்கிவிட்டனர். இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த கூட்டத்தில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கூச்சலிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full