அரண்மனை கிளி சீரியல் நடிகருடன் கடற்கரையில் டிக் டாக் செய்த நீலிமா ராணி. வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 23/12/2019

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை நீலிமா. 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதன் பின்னர் பல்வேறு திரைப் படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்.

https://twitter.com/sivakubendiran/status/1209048022870450176

' நான் மகான் அல்ல' படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வாங்கினார். பிறகு வழக்கம் போல் நடிகை நீலிமாவும் சின்ன துறை நோக்கி பயணம் செய்தார். இவர் நடித்த முதல் சீரியல் 1998ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியல் தான். அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். அதிலும் 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இவருக்கு சிறு வயதிலேயே அதாவது 20 வயதிலேயே திருமணம் செய்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : புகைபிடிக்காதீர்கள் என்று புகைபிடிக்கும் புகைப்படத்தை பதிவிட்ட விஷ்ணு விஷால். அதற்கு அவர் சொன்ன காரணத்தை பாருங்க.

இவர் திருமணம் ஆனாலும் தொடர்ந்து தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார். பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி அவர்கள் டிக் டாக்கில் வீடியோக்கள் செய்து இணையத்தில் வெளியிட்டுவருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை நீலிமா, நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் தன்னுடன் நடித்த நடிகருடன், கடற்கரையில் டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என்ன தான் நண்பர்களாக இருந்தாலும் திருமணமாகி அதுவும் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்து இப்படியெல்லாம் டிக் டாக் செய்து அதுவும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதா?? என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இவர் மிகச் சிறந்த திறமையான நடிகையும் என்றும் கூட ஒரு சில பேர் பாராட்டியும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சியில் இருந்து கொஞ்சம் விலகி இருந்து அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பின் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. தற்போது நடிகை நீலிமா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனை கிளி ‘ தொடரிலும் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் ”சக்கோயம் மரியம்” என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full