தமிழ் சினிமாவில் தரமான நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஒரு தனி இடம் உண்டு. வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஷ்ணு. இவர் வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். நடிகர் விஷ்ணு அவர்கள் சினிமாத்துறையில் நுழைந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. மேலும், இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘ராட்சசன்’ திரைப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வாட்சன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தற்போது இடம் பொருள் ஏவல்’, மற்றும் ஜகஜல கில்லாடி என்ற இரண்டு படத்தில் நடித்து வருகிறார். சினிமா உலகில் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் செய்வதை பாலோ செய்வதற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் என்ன செய்தாலும் அப்படியே அவர்களைப் போலவே செய்து ரசிப்பார்கள் ரசிகர்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் செய்வதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்தும் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
தற்போது இவர் நடித்து வரும் படத்தில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது நடிகர் விஷ்ணு அவர்களுக்கு சிறு விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தால் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கழுத்துப் பகுதியில் தான் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் வருகிறார். இன்னும் சில நாட்களில் குணமாகி விடுவேன் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் நடிகர் விஷ்ணு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் போட்டு உள்ளார். அதில் அவர் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை போட்டு “சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு” என்று கூறி விட்டு இந்த வருடத்தோடு கடைசியாக இந்த சிகரட் பிடிப்பதை முடித்து விடுங்கள்.
2020ஆம் ஆண்டு பிறக்கும் போது சிகரெட் பிடிக்காதவராக இருங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும், தனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார் விஷ்ணு விஷால் இதை பார்த்தாவது ரசிகர்கள் சிகரெட்டை பிடிப்பதை விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இதை செய்தார் என்றும் கூறி இருந்தார். சிகரெட் பிடிப்பதன் மூலம் பல பேர் தங்களுடைய வாழ்க்கையை இழந்து உள்ளார்கள். மேலும், பல பேர் புகைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து உள்ளார்கள். இந்த வருடம் இந்தியாவில் மட்டும் அதிக பேர் புகையிலை மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடுத்த வருடமாவது இந்த எண்ணிக்கை குறையும் என்ற நம்பிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.