வணக்கம் இந்த வாரம் ஊட்டியிலிருந்து, இந்த வாரம் மதுரையிலிருந்து,இந்த வாரம் கோயம்புத்தூரிலிருந்து என்ற இந்த வார்த்தைகளை கண்டிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் தற்போதும் மறந்திருக்க மாட்டார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் 90 கிட்ஸ் மத்தியில் இன்றும் மனதிலிருந்து நீங்காமல் தான் இருக்கும். அந்த வகையில் நீங்கள் கேட்ட பாடல் என்று நிகழ்ச்சியும் ஒன்று. ஒரு காலத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியை வித்யாசமான முறையிலும் சுவாரசியமான முறையிலும் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் விஜய் சாரதி.

ஊர் ஊராக சென்று அந்த ஊரில் என்ன சிறப்பு என்பதை கூறுவார். மேலும், அங்கு இருக்கும் ஊர் மக்களுடனும், அந்த ஊருக்கு வரும் சுற்றுல்லா பயணிகளுடனும் உரையாடி பின்னர் அவர்களுக்கு பிடித்த பாடல்களை ஒளிபரப்புவார்கள். தற்போது வேண்டுமானால் ‘இது என்ன புதுசான விஷயமா’ என்று கேட்கலாம். ஆனால். 90 ஸ் கிட்ஸ்களுக்கு தான் இந்த நிகழ்ச்சியின் அருமையே தெரியும் என்று சொன்னாலும் அதற்கு நிகரில்லை.

இதையும் பாருங்க : சினிமாவில் நடிக்கும் முன்னே சீரியலில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யா (மறுபடியும் சீரியலுக்கு தான் போகனும் போலயே)

Advertisement

90ஸ் மனதை கொள்ளைகொண்ட Anchor :

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சாரதி ஒரு படித்து முடித்த பட்டதாரி ஆவார். படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன் பின்னர் யதேச்சையாக சன் டிவியில் ஒரு ஆடிசனில் கலந்துகொண்டு செலக்ட் ஆனார். அதன் பின்னர் வந்ததது தான் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய பிரபலம் ஆனார் விஜய் சாரதி. விஜய், அஜித், ரஜினி, கமல் என பலரையும் பேட்டி கண்டுள்ளார் விஜய் சாரதி.

இறுதியாக நடித்த படம் :

மேலும், இவர் ஒரு சில படங்களில் கூட நடித்து இருக்கிறார். படையப்பா படத்தில் ரஜினியின் மருமகனாக நடித்து இருந்தார். இறுதியாக விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடித்து இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்று எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இவர் இலங்கையில் தான் வசித்து வந்தார். அதே போல யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Advertisement

விஜயசாரதியின் தந்தை :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட வீடியோ ஒன்றை வெளியிட்ட இவர் ‘ யூடியூப் சேனல் நடத்தும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். என்னைப் பற்றி எழுதுவது, விசாரிப்பது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 90கிட்ஸ் இலிருந்து 2k கிட்ஸ் வரை எல்லோரும் என்னை நினைவில் கொண்டு கேட்பதில் பெருமையாக இருக்கிறது. மறைந்த நடிகர் சசிகுமார் மகன் தான். நான் என்னுடைய அப்பாவும் அம்மாவும் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் நடந்த தீ விபத்தில் இறந்து விட்டார்கள்’ என்று உருக்கமுடன் பேசி இருந்தார்.

Advertisement

மீண்டும் Anchor வேலை :

இப்படி ஒரு நிலையில் மீண்டும் Anchor ஆக களமிறங்கி இருக்கிறார் விஜயசாரதி. சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அவரை பேட்டி எடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் வந்துவிடீர்களா உங்களை இனி அடிக்கடி பார்கலாமா என்று கேள்விகளை கேட்க, தான் ஒரு தனியார் யூடுயூப் சேனலில் சேர்ந்துவிட்டதாகவும் இனி தன்னை அடிக்கடி பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Advertisement