சினிமாவில் நடிக்கும் முன்னே சீரியலில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ள ஸ்ரீதிவ்யா (மறுபடியும் சீரியலுக்கு தான் போகனும் போலயே)

0
1939
sridivya
- Advertisement -

தமிழ் ,சினிமாவில் ஹோம்லியான லுக் இருந்தும் நிலைத்து நிற்க முடியாமல் இருக்கும் பல நடிகைகளில் நடிகை ஸ்ரீதிவ்யாவும் ஒருவர். நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதிவ்யா அவர்கள் மூன்று வயதிலேயே தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சொல்லலாம். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டு தான் இவர் ‘மனசார’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-34.png

பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் பென்சில், ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது என பல படங்களில் நடித்துள்ளார்.மேலும்,2013 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் என்பவர் இயக்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

- Advertisement -

முன்னணி நடிகையாக முடியாத ஸ்ரீதிவ்யா :

அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.இந்த படத்திற்கு பிறகு தான் பல இடங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சங்கங்களை இளைஞர்கள் புதிதாக துவக்கினார்கள் என்று கூட சொல்லலாம். அதன் பின்னர் இவர் ஜீவா, காஸ்மோரா, காக்கி சட்டை போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

5 ஆண்டுகளாக வாய்ப்பில்லை :

ஆனால், இருக்கு அதன் பின்னர் டாப் ஹீரோக்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வரிசையாக பட வாய்ப்புகளும் வரவில்லை. இறுதியாக இவர் ஜீவா நடிப்பில் வெளியான சங்கிலி புங்களி கதவ தோற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாக இவர் வாய்ப்பில்லாமல் தான் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

ஸ்ரீதிவ்யா நடித்த சீரியல் :

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பிரித்திவிராஜுன் ஜன கன மன படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் நடித்த சீரியலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதுவும் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக Thoorpu Velle Railu என்ற சீரியலில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார்.

Advertisement