கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர்வர்களும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டிவந்தனர்.

மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இருப்பினும் அணைத்து எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு நடைபெற்று தான் வந்தது. அனிதா போது பல்வேறு நடிகர்கள் நேரில் சென்று அனிதாவின் குடும்பத்தினரை பார்த்தனர்.

Advertisement

நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி உதவியும் செய்தார். மேலும், மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவின் போது தனது ட்விட்டரில் “நமது அன்புச் சகோதரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள். அவர் வசித்த வீட்டுக்குச் சென்று பார்த்தேன். அவர் அனுபவித்த வலி எனக்குப் புரிந்தது. இனி யாருக்கும் இது நடந்துவிடக்கூடாது” எனப் பதிவிட்டிருந்தார்.

Advertisement

இந்த நிலையில் அனிதாவிற்கு இன்று பிறந்தநாள், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதாவின் புகைப்படத்துடன் பதிவிட்டு #HBDdoctorAnitha என்று பதிவிட்டுள்ளார். மற்ற அனைவரும் அனிதாவை பற்றி மறந்த நிலையில் ஜி பிரகாஷின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Advertisement