நீயா நானா கோபிநாத் கோட் அணிவதுக்கு காரணம் இது தானாம் – அவரே கூறிய சீக்ரெட்.

0
2929
gopinath
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத். தொகுப்பாளர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

-விளம்பரம்-

இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

- Advertisement -

மேலும், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். நீயா நானா நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் வாமனன், டோனி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் கூட நடித்துள்ளார்.

கோபிநாத் என்று சொன்னதும் நம் நினைவிற்கு முதலில் வருவது அவருடைய கோட் தான். ஆனால், உண்மையில் கோட் அணிவதற்கான காரணம் என்ன என்பதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கோபிநாத். அதில், வேலை காரணமாக தான் கோட் அணிகிறேன். மற்ற நிகழ்ச்சியை போல் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் இங்கும் அங்கும் நடப்பது போல இருக்கும். அதனால் மைக், பேட்டரி போன்றவைகளை பின்னால் இருப்பது தெரிய நேரிடும். அதனை மறைக்கத்தான் கோட் பயன்டுத்தினோம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement