விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி “நீயா நானா”.2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா ஆண்டு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிரான இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் வேலைக்கு அமர்த்திய குடும்ப தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று இருந்தது.

அந்த எபிசோடில் கோபிநாத்தின் பேச்சும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பேச்சும் பலரை நெகிழிச்சியில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார். இதுகுறித்த பேசிய அந்த பெண்ணின் கணவர் ‘நான் பள்ளியில் படிக்கும் போது  7 மார்க், 8 மார்க்னு வாங்குவேன்.

Advertisement

படிக்காத தந்தையின் ஏக்கம் :

ஆனால என் மகள் 80, 90 மார்க் வாங்குவதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது. அதனால் தான் ஒரு மணிநேரம் பார்க்கிறேன்’ என்று கூறி வெகுளியாக கூறி இருந்தார்.தன் மகள் வாங்கிய மதிப்பினை ஒரு அப்பன் ஒரு மணி நேரம் பார்க்கிறானே அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெண்ணை கோபிநாத் கேட்டதற்கு அவர் ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார். அவர் இன்னும் 90ஸ்ல தான் இருக்கார் என்று கேலி செய்ய உடனே கோபிநாத் அந்த பெண்ணின் மகளை அழைத்து அவருக்கு சிறந்த அப்பா என்று பரிசையும் வழங்கினார்.

படித்த மனைவியை திட்டி தீர்த்த நெட்டிசன்கள் :

மேலும், அந்த மகளிடம் உன் அப்பா இன்னும் தோற்கவில்லை என்று கூற அதற்கு அந்த மகளும் என் அப்பா தோற்கவில்லை, அவர் எனக்காக தான் கஷ்டப்படுகிறார் என்று கண்ணீர் மல்க கூறியது பலரை கண்ணீரில் ஆழ்த்தியது. இந்த எபிசொட் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சூப்பர் அப்பா என்று பலரும் அந்த தந்தையை பாராட்டி வருகின்றனர். அதே போல தன் கணவரை ஏளனம் செய்த அந்த பெண்ணை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement

கணவர் மனைவி அளித்த பேட்டி :

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கணவன் மனைவியை youtube சேனல் ஒன்று பேட்டி கொண்டிருக்கிறது அந்த பேட்டியில் பேசிய அந்தக் கணவரின் மனைவி இந்த நிகழ்ச்சியில் தான் இவர் மனதிற்குள் இவ்வளவு விஷயங்களை வைத்திருக்கிறார் என்பதை எனக்குத் தெரியும் ரேங்க் கார்டு விஷயத்தை எல்லாம் அவர் இந்த நிகழ்ச்சிகளில் தான் என்னிடம் சொன்னார் அவருக்கு தான் சம்பாதிக்கவில்லை என்ற எண்ணம் இருக்கிறது அதனால் தான் அப்படி பேசி விட்டார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement

அதேபோல அந்த மனைவியின் கணவர் பேசுகையில் நான் நிகழ்ச்சிகள் சொன்னதைப் போலத்தான் நான் எடுக்க முடியாத மதிப்பெண்களை என் மகள் எடுக்கிறார் என்பது எனக்கு சந்தோஷம் என் மகள் சைக்கிள் வாங்கி கொடுக்க கேட்டால் நான் என்னுடைய மருத்துவ செலவுகள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து இருக்கிறேன் அவரது தம்பி தான் வாங்கிக் கொடுப்பதாக சொன்னார்.

நிறைவேறிய மகளின் சைக்கிள் கனவு :

ஆனால், என் மகளுக்கு நான்தான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றும் கூறியிருக்கிறார், இந்த நிலையில் அந்த யூட்யூப் சேனல் இவர்களது மகளுக்கு அவர் ஆசைப்பட்டது போலவே சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறது, தன் மகளை சைக்கிளில் அமர வைத்து ஓட்டி அழகு பார்த்த அந்த தந்தை அப்பா இருக்கிறேன் என்ன பயம் என்று தன் மகளுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுப்பதை பார்க்கும்போது மீண்டும் நம் மனம் கலங்குகிறது,

Advertisement