சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினியை கண்ட ஒரு மகிழ்ச்சியை நமக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் மீறி படத்தில் பல ஓட்டைகளும் இருந்தது.

பில்டப் :

Advertisement

படத்தின் முதல் மைனஸ் இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே இந்த படத்திற்க்கு கொடுத்த பில்ட்டப் தான். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு வேலை பில்ட்டப்பை குறைத்திருந்தால் படம் ரசிகர்களுக்கு முழுமையாக பிடித்திருக்கும்.

படத்தின் நீளம்:

Advertisement

படத்தின் அடுத்த நீளம் இந்த படத்தின் நீளம் தான். முதல் பாதி விறுவிறுப்பாக சென்று விடுகிறது. ஆனால்,படத்தின் இரண்டாம் பாதியில் தேவை இல்லாமல் படத்தை இழுத்துக்கொண்டே சென்று விடுகின்றனர். இரண்டாம் பாதியில் சிலர் தூங்கிவிட்டதை கூட நம்மால் பார்க்க முடிந்தது.

Advertisement

தேவையற்ற கதாபாத்திரங்கள்:

இந்த படத்தில் த்ரிஷா, சிம்ரன், மெகா ஆகாஷ், நவாஸுதீன் சித்திக் போன்ற பல நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும் படத்திற்கு இவர்களின் பங்களிப்பு மிக குறைவாகவே இருந்தது. படத்தின் பெரும்பாலான பிரேம்களில் ரஜினியே இருப்பது ஒரு கட்டம் வரை தான் நம்மால் ஒப்புக்கொள்ள முடிகிறது. அதற்கு மேல் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது குறிப்பாக இரண்டாம் பாகத்தில்.

விஜய் சேதுபதி:

இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக எதிர்பார்க்கபட்டது விஜய் சேதுபதி தான். ஆனால், அவருக்கு அந்த அளவிற்கு கதாபாத்திர அழுத்தம் கொடுக்கப்படவில்லை. மேலும், அவர் வரும் காட்சிகளிலும் சுவாரசியம் பெரிதாக இருந்தது போல் இல்லை.

சிறப்பான தரமான சம்பவம் :

இந்த படத்தின் ட்ரைலரில் ரஜினி கூறும் சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பாக்கப்போற என்ற வசனம் தான் இந்த படத்தின் திருப்பு முனை கட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்க பட்டது. நவாஸுதீனின் அண்ணனை கொள்ளும் காட்சியாகட்டும் இறுதியில் ட்விஸ்ட் என்ற பெயரில் விஜய் சேதுபதியை கொள்ளும் காட்சியாக இருக்கட்டும் எந்த காட்சியிலும் சிறப்பான தரமான சம்பவத்தை உணர்ந்தது போல இல்லை.

Advertisement