பட வாய்ப்புக்காக படுக்கை…நடிகைகள் லிஸ்ட்…சர்ச்சை உண்டாக்கிய தயாரிப்பாளர் மனைவி

0
3403
Neha nehu

வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நடிகைகளின் பட்டியல் தயார். விரைவில் வெளியிடுவேன் என்கிறார் தயாரிப்பாளரின் மனைவி.இதுவரையிலும் தமிழ்த்திரையுலகில் நடிகர்கள்,இயக்குஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் நடிகைகளுக்கும் பிற பெண்களுக்கும் தான் பாலியல் தொந்தரவு இருப்பதாக பல நடிகைகள் கூறிவந்துள்ளனர்.இப்போது நடிகைகள் மீதே பிரபல தயாரிப்பாளரின் மனைவி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

neha

தமிழ்த்திரையுலகின் முன்னனி தயாரிப்பாளர்களில் ஒருவர் கே.ஞானவேல்ராஜா. இவரது மனைவி நேகா ஞானவேல்ராஜா. இந்த நேகா ஞானவேல்ராஜா தான் தற்போது சமூகவலைத்தளத்தில் “சில நடிகைகள் திரைத்துறையில் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் தயாராகவே இருக்கின்றார்கள். திருமணமான ஆண்கள் அவர்களின் முக்கியமான குறி. இதுபோன்ற நடிகைகளால் தான் பல குடும்பம் சீரழிகின்றது. இதுபோன்ற நடிகைகள் விபச்சார தொழிலில் ஈடுபடம் பெண்களை விடவும் மோசமானவர்கள்.

விரைவில் அதுபோன்ற நடிகைகளின் பெயர் பட்டியலை வெளியிட்டு விரைவில் அவர்களை சினிமா துறையில் இருந்து விரட்டியடிப்பேன்” என பதிவிட்டிருந்தார். உடனே அவரை சமூகவலைத்தளத்தில் பின்தொடரும் பலரும் “இது உங்கள் கணவருக்கு ஏற்பட்ட நிகழ்வா” என பலரும் கேள்வி கேட்க கொஞ்ச நேரத்தில் நேஹா அந்த பதிவை நீக்கிவிட்டார்.

மேலும் சிலர் மீண்டும் சுசிலீக்ஸ் போன்ற புதிய லீக்ஸை நேஹா வெளியிடப்போகின்றார் என கிளப்பிவிட மீண்டும் நேஹா ஞானவேல்ராஜா மற்றொரு விளக்கத்தையும் டிவிட்டரில் கொடுத்துள்ளார்.

அந்த பதிவில் “எனக்கும் என கணவருக்கும் இடையில் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் சுமூகமாகவே இருக்கிறோம். இதுபோன்றதொரு ஒரு விஷயத்தை நான் பொழுதுபோக்குக்காக செய்யவில்லை” நன்றி என்று அதில் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் நடிகைகளுக்கு பலவிதத்தில் பலரும் தொந்தரவு தருவதாக தான் இவ்வளவு நாட்களும் புகார் இருந்து வந்தது.
தற்போது நடிகைகளால் திரைத்துறையை சேர்ந்த பல குடும்பங்கள் சீரழிந்துள்ளதாக பிரபல தயாரிப்பாளரின் மனைவியே குற்றஞ்சாட்டியிருப்பது திரைத்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.