விக்ரம் படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார் கமல். இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் நெல்சனை கேலி செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா என்று பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கிறது. நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான கமல் படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பாரப்பை வைத்து இருந்தார்கள். அந்த நம்பிக்கையை காப்பற்றி இருந்தார் லோகி.

லோகேஷ் கனகராஜுக்கு கமல், கார் பரிசளித்ததை தொடர்ந்து தற்போது நெட்டிசன்கள் பலரும் நெல்சனை கேலி செய்து வருகின்றனர். லோகேஷ்க்கு Lexus அப்போ நெல்சனுக்கு nexus ah என்று கேலி செய்து வருகின்றனர். அதே போல பீஸ்ட் படம் வெளியான முன்பே சன் டிவி பேட்டி ஒன்றில் பேசிய நெல்சன், படம் வெற்றி பெற்றால் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லுமாறு விஜய்யிடம் கேட்டு இருந்தார். அதை குறிப்பிடும் கேலி செய்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : 15 கிலோ வரை உடல் எடை குறைத்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் ப்ரீத்தி – அதுவும் எந்த சீரியல்ன்னு தெரியுமா?

Advertisement

பீஸ்டால் டேமேஜ் ஆன நெல்சன் பெயர் :

லோகேஷ் கனகராஜின் முந்தய படங்களான மாஸ்டர், கைதி போன்று இந்த படமும் ஒரு ஆக்ஷன் விருந்தாக அமைந்து இருக்கிறது. மேலும், பலரும் எதிர்பார்த்தது போலவே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜை பாராட்டி வருவதை விட பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை குறிப்பிட்டு தான் பல மீம்கள் வந்து கொண்டு இருக்கிறது.

Fan Boy விஷயத்தை கோட்டைவிட்ட நெல்சன் :

விக்ரம் படம் ஓடியதற்கு நெல்சனை கலாய்க்க முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் விஜய்யின் தீவிர ரசிகர். பீஸ்ட் படம் எடுப்பதற்கு முன்னாள் அவர் கண்டிப்பா ஒரு Fan Boy சம்பவத்தை செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், லோகேஷ் கனகராஜும் கமலின் தீவிர ரசிகர் தான்.

Advertisement

நெல்சன் அளித்த பேட்டிகள் :

எனவே, அவரும் கமலை வைத்து ஒரு தரமான Fan boy சம்பவத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை நிறைவேற்றி இருக்கிறார் லோகேஷ். இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் நெல்சனை திட்டி தீர்த்து வருகின்றனர். அதே போல பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பாக நெல்சன் அளித்த பேட்டிகளில் அவர் பேசிய பேச்சுக்கள் தான் தற்போது இந்த கேலிகளுக்கு மற்றுமொரு முக்கிய காரணம்.

Advertisement

அதிலும் குறிப்பாக ஒரு பேட்டியில் நல்ல படம் எடுத்து என்ன பண்ண போகிறோம். எல்லாரும் படம் எடுப்பது அது நன்றாக வசூலிக்கும் பணம் சம்பாதிக்கும் என்று தான் என்று பேசி இருந்தார். ஆனால், விக்ரம் படத்திற்கு முன் பல பேட்டிகளில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளாமல், மிகவும் தன்மையுடன் தனது படைப்பை பற்றியும் அதில் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை பற்றியும் தான் பேசி இருந்தார்.

Advertisement