15 கிலோ வரை உடல் எடை குறைத்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் ப்ரீத்தி – அதுவும் எந்த சீரியல்ன்னு தெரியுமா?

0
1179
sanjeev
- Advertisement -

15 கிலோ வரை உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியலில் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் என்ட்ரி கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அந்த வகையில் மற்ற சேனல்களை விட சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அதில் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கண்ணான கண்ணே.

-விளம்பரம்-
Kannana Kanne Serial Nithya Das | கண்ணான கண்ணே நித்யா

இந்த இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அப்பா-மகள் இடையேயான பாச போராட்டத்தை மையமாக கொண்ட தொடர். தெலுங்கில் ‘பௌர்ணமி’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தமிழில் ‘கண்ணான கண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சீரியல்களில் கண்ணான கண்ணே தொடரும் ஒன்று .இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவந்தது.

- Advertisement -

கண்ணான கண்ணே சீரியல்:

இந்த தொடரில் கதாநாயகனாக ராகுல் ரவி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாகவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் நடித்து இருந்தார். பிறகு சாக்லேட் என்ற தொடரிலும் நடித்து இருந்தார். இந்த தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த தொடரில் பிரித்திவிராஜ், பிரீத்தி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தொடரில் பிரீத்தி சஞ்சீவ் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

Kannana Kanne Serial Actress Nithya Das Swimming Pool Photo

பிரீத்தி சஞ்சீவ் குடும்பம்:

இந்த தொடரில் வாசுகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் பிரீத்தி சஞ்சீவ் . இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவைப் பெற்று இருந்தார். ஆனால், இவர் இந்த சீரியலுக்கு முன்னே சின்னத்திரை சீரியலில் நடித்து இருக்கிறார். இவருடைய கணவர் சஞ்சீவ். இவரும் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலுமே மிகப் பிரபலமான நடிகர். அதுமட்டுமில்லாமல் இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது . ஆரம்பத்தில் சஞ்சீவ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

பிரீத்தி சஞ்சீவ் சின்னத்திரை பயணம்:

அதேபோல் நடிகை பிரீத்தி சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் பிஸியாக இருந்தவர். இவர் சிறந்த டான்ஸரும் ஆவார். பின் இவர் திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார். கொரோனா காலத்தில் இவர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மம்மி என்ற நிகழ்ச்சியில் தன் மகளுடன் பங்கு பெற்று இருந்தார். அதற்கு பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் வாசுகி என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்கு ரீஎண்ட்ரி கொடுத்து இருந்தார்.

பிரீத்தி சஞ்சீவ் ரீ-என்ட்ரி:

ஆனால், ப்ரீத்தி இடையில் பிரேக் எடுத்துக் கொண்டார். இதனால் வாசுகி ஊருக்கு செல்வது போல கதையில் காண்பித்தார்கள். திருமணத்திற்கு பின்பு பிரீத்தி சஞ்சீவ் அதிகமாக வெயிட் போட்டதால் தற்போது கடின உடற்பயிற்சி மேற்கொண்டு 15 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறார். இவர் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் எல்லாம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் மீண்டும் பிரீத்தி கண்ணான கண்ணே சீரியலில் அவர் நடித்த வாசுகி என்ற ரோலில் தான் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது அதற்கான ப்ரோமோ எல்லாம் வெளியாகி உள்ளது.

Advertisement