தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் இவர் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து இருந்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார்.

அதன் பின் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த லிப்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கவின் நடித்த டாடா, ஸ்டார் போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கவின் நடிப்பில் வெளிவந்த பிளடி பெக்கர் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
மாஸ்க் படம்:
பின் கடைசியாக நடிகர் கவின் நடிப்பில் வெளிவந்த படம் கிஸ். இந்த படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அயோத்தி புகழ் பிரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்திருந்தார்ர்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்க். இந்த படத்தை விகர்னன் அசோக் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஆன்ட்ரியா, ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

நெல்சன் பேசியது:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்து கொண்ட நெல்சன், மாஸ்க் பட ஐடியா பேசும்போதே, ரொம்ப குதர்க்கமாக இருக்கு. இந்த ஐடியா யார் யோசித்தது என்று கேட்டேன். விகர்னன்ன்னு சொன்னாங்க. அவர் ஆளே ஒரு மாதிரி தான் என்று கவின் சொன்னான். அவர் மூஞ்சிய பாக்கணும்னு ரொம்ப ஆர்வமாக இருந்தது. ஒருநாள் வெற்றிமாறன் சார் ஆபீஸில் பார்த்தேன். இந்த மூஞ்சிக்கு எல்லா கிரைம் பொருத்தமாக இருந்தது. விகர்னன் இந்த கதையை யோசித்தது பெரிய விஷயம். அதை சொல்லி இவ்வளவு பெரிய இயக்குனர் ஏமாத்தினது அதைவிட பெரிய விஷயம். பொதுவாக வெற்றிமாறன் சார் தயாரிக்கிற படங்கள் சமூக ரீதியிலனாதாக தான் இருக்கும்.
https://www.youtube.com/watch?v=P6lK2558y_E
படம் பற்றி சொன்னது:
இந்த படத்தில் அது இருந்தாலும் ரொம்ப என்டர்டைனிங்கா இருந்தது. முதலில் இந்த கதையை கேட்கும் போது கவின் கதாபாத்திரமே கிரேவாக இருந்தது. வெற்றிமாறன் சார் அதையெல்லாம் சரி பண்ணி இருக்காருன்னு நினைக்கிறேன். மூணாவது முறை கேட்கும் போது ரொம்ப நல்லா இருந்தது. இந்த படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். கவின் துணிச்சலாக எக்ஸ்பெரிமெண்டல் படங்களில் களமிறங்கி இருக்கிறார். அடி வாங்கினாலும் வாங்குகிறார். சட்டையை திறந்து பார்த்தால் நிறைய காயங்களாக இருக்கும். இப்போது அவருக்கு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலுமே 5,10 வருஷம் கழித்து ரொம்ப நிலையான இடத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் அவருடைய நடிப்பு மெச்சூரிட்டியும் நல்லா இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.






