டாக்டர் படத்தில் பெண்களை இழிவுப்படுத்தி காட்சிகள் வைத்துள்ளதாக கூறிய பெண்கள் சார்ந்த அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு படத்தின் இயக்குனர் நெல்சன் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகிபாபு, வினய் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து பலரும் ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற நிலையில் இந்த படம் முழு நீள காமெடி படமாக அமைந்து இருந்தது.

இதையும் பாருங்க : தம் அடிக்கறதால லிப்ஸ் கருப்பாச்சா ? பார்வதி வெளியிட்ட வீடியோ. கலாய்க்கும் ரசிகர்கள்.

Advertisement

அதிலும் குறிப்பாக கிங்ஸ்லி, யோகி பாபு போன்றவர்களின் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்நிலையில் டாக்டர் படத்தில் விளையாட்டில் தோல்வி அடைந்த அணிக்கு நைட்டி போட்டு விட்டு, தலையில் பூ வைத்து பெண் போல சித்தரித்து இனி உன் பெயர் கோமதி என்று கேலி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த காட்சியை குறித்து மகளிர் அமைப்புகள் பெண்கள் என்றால் இழிவா? என்று டாக்டர் படம் மீது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்திலும் கண்டனம் தெரிவித்த பெண்ணிய ஆர்வலரும் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவருமான ராஜேஸ்வரி பிரியா, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படத்தில் நகைச்சுவை என்னும் பெயரில் பெண்ணை இழிவு படுத்துவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.ஆண் தோற்றுவிட்டதனால் பெண் உடை அணிவித்து கோமதி என்று பெயர் சூட்டி இழிவு செய்யும் காட்சி.

Advertisement

இன்னும் எத்தனை காலம்தான் பெண்ணை பலமற்றவளாக சித்திகரிக்க போகிறீர்கள். இத்திரைப்படத்தில் சில நல்ல கருத்துக்களை கூறியிருந்தாலும் வாழை இலை போட்டு அறுசுவை உணவு படைத்து சற்று மலத்தையும் உடன் பரிமாறியதற்கு ஒப்பான செயல் ஆகும் அந்த காட்சி.கோமதிகளின் கோபம் ஒருநாள் உங்களை போன்றோரை விரைவில் சுட்டெரிக்கும் என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நெல்சன், படத்தில் பெண்களை மரியாதைக்குறைவாக காட்டுவதாக இருந்தால் நீங்கள் சொல்லலாம். ஆனால், அந்த காட்சியில் இருப்பவர்கள் ஒரு கேம் விளையாடுகிறார்கள். அதில் அவர்கள் அறிவிற்கு தகுந்த மாதிரி சில விஷயங்களை செய்கிறார்கள் அவ்வளவு தான். என்னுடைய படங்களில் பெண் கதாபாத்திரம் வலுவானதாக தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். கோலமாவு கோகிலா படத்தில் கூட தன்னுடைய அம்மாவை காப்பாற்ற எந்த எல்லைக்கும்போவேன் என்பது தான் நயன்தாரா கதாபாத்திரம். பூ வைத்துக் கொள்ளும் சீனை அந்த காட்சியில் நடித்திருக்கும் 4 கதாபாத்திரத்தின் அறிவாக மட்டும் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement