தம் அடிக்கறதால லிப்ஸ் கருப்பாச்சா ? பார்வதி வெளியிட்ட வீடியோ. கலாய்க்கும் ரசிகர்கள்.

0
26863
parvathy
- Advertisement -

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் சேர்த்து அவர்களுக்கு கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 18 பேர்களை இரு அணிகளாக காடர்கள், வேடர்கள் என பிரித்து சவால்கள் தொடங்கியது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-115-1024x572.jpg

இந்த நிகழ்ச்சியில் பார்வதி கலந்து கொண்ட போதே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. பார்வதி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் நாள் முதலே அவரது பேச்சுகளும் செயல்பாடுகளும் ரசிகர்களை எரிச்சலடைய செய்தது, அதுமட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் இடம் பார்வதி நடந்துகொண்ட விதத்தை பார்த்து ஓரிரு நாட்களிலேயே சக போட்டியாளர் இடம் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டார்.

இதையும் பாருங்க : அப்பாவும் கவுண்டமணி அங்கிளும் பேசுறது இல்லையா – செந்திலின் டாக்டர் மகன் அளித்த பேட்டி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தான் கடந்த திங்கள் கிழமை இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் காயத்ரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் காயத்ரி சிறப்பாக விளையாடி வென்றதால் பார்வதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்த ஒரு வெளியேற்றத்திற்காகத்தான் ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தநிலையில் சர்வைவர் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பார்வதி இந்த நிகழ்ச்சிக்கு முன் எடுத்த தன் புகைப்படத்தையும் சர்வைவர் நிகழ்ச்சியில் கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அதில், தன்னுடைய பழைய பொலிவான முகத்தை மிஸ் செய்வதாக பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் பழைய புகைப்படம் மேக்கப்புடன் இருக்கிறது என்றும் இந்த புகைப்படம் மேக்கப் இல்லாமல் இருக்கிறது அவ்வளவுதான் என்று பார்வதியை அங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும் , சர்வைவருக்கு பின் பார்வதி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவரது உதடு கருப்பாக இருப்பதை பார்த்து நிறைய பேர் ஸ்மோக் பண்றதால தான் இப்படி ஆச்சுன்னு சொல்றாங்க. ஆனால், அப்படி இல்ல நெட்சரலாவே என் உதடு இப்படி தான். இது போய் ட்ரீட்மென்ட் எடுக்கணும் என்று கூறியுள்ளார்.

Advertisement