‘இது ஒரு மியூசிக்கள் சேர் மாதிரி சார்’ – ரசிகர்களை கவர்ந்த நெல்சனின் தன்னடக்க பேச்சு (மத்த இயக்குனர்கள் கத்துகோங்கபா)

0
411
nelson
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். விஷுவல் கம்யூனிகேஷன் என்ற இளங்கலை பட்டம் முடித்தவர். இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சின்னத்திரையில் மிக பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நெல்சன் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் சின்னத்திரையில் தயாரிப்புக் குழுவில் ஒருவராகவும் பணி ஆற்றியிருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி சின்னத்திரையில் கொடிகட்டிப் பறந்தாலும் வெள்ளித்திரையில் இவரால் தடம் பதிக்க முடியவில்லை. இவர் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசனை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்குனார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நின்றது. இதனால் மனம் உடைந்து சிலகாலம் நெல்சன் படம் இயக்காமல் இருந்தார். பின் 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார். அனிருத் மூலமாகத்தான் இவருக்கு கோலமாவு கோகிலா படம் பண்ண வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம்.

- Advertisement -

நெல்சனின் டாக்டர் படம்:

காமெடி கமர்ஷியல் பாணியில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. பிறகு தமிழ் திரை உலகில் மிக பிரபலமான இயக்குனராக ஆனார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. டாக்டர் படம் பெண்கள், குழந்தைகள் கடத்தல் என சீரியசான பிரச்சினைகளை கொண்டிருந்தாலும் இதற்கிடையில் காமெடி கொண்டு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. அதுவும் கொரோனா காலத்தில் இந்த மாதிரியான சீரியஸ் கலந்த காமெடி படம் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி தந்தது.

nelson

நெல்சனின் பீஸ்ட் படம்:

இதனைத் தொடர்ந்துதற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் படத்தின் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

-விளம்பரம்-

நெல்சன் இயக்கும் அடுத்த படம்:

இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி சினிமா உலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு விடாது உழைத்த நெல்சன் தன்னுடைய 4 வது படமாக ரஜினிகாந்துடன் சேர்ந்து இருக்கிறார். சமீபத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருந்தார்கள். தற்போது டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படம் ‘தலைவர் 169’.

நெல்சன் அளித்த பேட்டி:

இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் நெல்சன் குமார் அளித்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, என்ன மிஞ்சிப்போனால் படம் ஹிட் இல்லைன்னா பிளாப். இது என்றும் நிரந்தரம் கிடையாது. இன்று நாம் இருப்போம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வேறு ஒருவர் இருப்பார். இது மாறிக் கொண்டேதான் இருக்கும். நான் சாதனை படைத்து ஒன்றும் நடக்கப்போவதில்லை. இந்த வாரம் ஒன்று நடக்கும் அடுத்த வாரம் வேறு நடக்கும். இது தமிழ் சினிமாவில் மட்டுமில்லை எல்லா மொழி சினிமாவிலும் இதுதான் நடக்கும்.

வைரலாகும் நெல்சனின் வாழ்க்கை தத்துவம்:

நமக்கு பின்னாடி இருந்தவர்கள் முன்னாடி போய் இருப்பார்கள். நமக்கு முன்னாடி இருந்தவர்கள் எங்கே போயிருப்பார்கள். இப்படி தான் வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கும். என்னுடைய ஐடியா வேலை செய்யும் வரை நான் இருக்கப்போகிறேன். வேலை செய்யவில்லை என்றால் வேறு ஒருவர் இருப்பார். இது மியூசிக்கல் சேர் மாதிரி மாறிக் கொண்டே இருக்கும். இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் ஏதாவது வாழ்க்கையில் பிரச்சினை வந்தாலும் நம்முடைய மனநிலை சாதரணமாக இருக்கலாம் என்று வாழ்க்கையின் தத்துவத்தை மிக அழகாக நெல்சன் கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement