தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர் என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் பீஸ்ட் படத்துக்கு பின்னர் சமூக வலைத்தளத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தார். அதிலும் விக்ரம் படம் வெளியான போது லோகேஷை பாராட்டியவர்களை விட நெல்சனை கேலி செய்தவர்களே அதிகம். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய அணைத்து படங்களும் வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து இருக்கிறது. இதனால் லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்துவந்தது. ஆனால், லோகேஷ் கனகராஜை பாராட்டி வருவதை விட பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை குறிப்பிட்டு தான் பல மீம்கள் வந்து கொண்டு இருந்தது. விக்ரம் படம் ஓடியதற்கு நெல்சனை கலாய்க்க முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் விஜய்யின் தீவிர ரசிகர். பீஸ்ட் படம் எடுப்பதற்கு முன்னாள் அவர் கண்டிப்பா ஒரு Fan Boy சம்பவத்தை செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

Advertisement

ஆனால், பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், லோகேஷ் கனகராஜும் கமலின் தீவிர ரசிகர் தான். எனவே, அவரும் கமலை வைத்து ஒரு தரமான Fan boy சம்பவத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை நிறைவேற்றி இருந்தார் லோகேஷ். இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் நெல்சனை திட்டி தீர்த்து வந்தனர்.கண்டிப்பாக ஜெய்லர் படத்தின் மூலம் நெல்சன் நிச்சயம் ஒரு கம் பேக் கொடுப்பார் என்று நெளசனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் நெல்சன் மற்றும் லோகேஷ் இருவரும் வரவேற்கப்பட்டு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விழாவில் லோகேஷை மட்டும் பாடி கார்ட்ஸ் அழைத்து சென்றனர். ஆனால், நெல்சன் மட்டும் யாரும் இல்லாமல் தனியாக சென்றார். இதனை குறிப்பிட்ட நெட்டிசன்கள் பலர் இது மிகவும் தவறான ஒன்று, ஒரு படம் Flop கொடுத்தால் இப்படி தான் நடத்துவீங்களா ? என்று கூறி வருகின்றனர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நெல்சனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நமக்கு பின்னால் இருந்தவர்கள் ரொம்ப முன்னாடி போய் இருப்பார்கள் நம் முன்னாடி பார்த்தவர்கள் நமக்கு பின்னாடி போய் இருப்பார்கள். இதே தான் நமக்கும். இதுதான் இங்கே மாடல் என்னுடைய ஐடியா வேலை செய்யும் வரை நான் இருக்க போகிறேன் என்று நான் அவுட் டவுட் ஆகிறேனோ என்னிடத்திற்கு வேறு ஒருத்தர் வரப்போகிறார்.

Advertisement

சினிமா என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அதில் இருக்கும் நபர்கள் மட்டும் மியூசிகள் சேர் மாதிரி மாறிக்கொண்டே இருப்பார்கள். இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் நாளை நான் சரியாக இல்லை என்றாலும் நான் சாதாரணமாக இருந்து விடுவேன் என்று பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து விருது விருது விழாவில் நெல்சனுக்கு நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு வருகிறார்கள்.

Advertisement