தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன். இவர் திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. பிறகு போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது. இவர் இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். பின் சில காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

நெப்போலியன் குடும்பம் பற்றிய தகவல்:

மேலும், இவரது குடும்பம் தற்போது அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு தனுஷ், குணால் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் மூத்த மகன் தனுஷுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளனர். ஏன்னா, அங்கு தனுஷிற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் நெப்போலியன் அவர்கள் ஹாலிவூட் படத்தில் நடித்து உள்ளார். அந்த ஹாலிவுட் படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார்.

நெப்போலியன் ஹாலிவுட் பயணம்:

நெப்போலியனுக்கு இது இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கிறித்துமஸ் கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான கதையில் நெப்போலியன் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அடுத்த அடுத்த படத்திலும் நெப்போலியன் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை என்று கூறப்படுகிறது. பின் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து இருந்த சுல்தான் என்ற படத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் நெப்போலியன் குறித்து நெப்போலியனின் அக்கா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

Advertisement

நெப்போலியன் அக்கா அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய பெயர் மங்கையர்கரசி. நான் நெப்போலியன் அக்கா. நாங்கள் மொத்தம் ஐந்து பேர். நெப்போலியன் திருச்சி கல்லூரியில் தான் படிப்பை முடித்தார். அதற்கு பிறகு சென்னையில் அமைச்சர் ஒருவரின் பிஏவாக வேலை பார்த்தார். நெருங்கிய சொந்தம் மூலமாக தான் அவருக்கு அந்த வேலை கிடைத்தது. அதற்குப் பிறகு தான் அவருக்கு பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படியே நெப்போலியனின் திரைப்பயணம் தொடர்ந்தது. மேலும், நெப்போலியன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ இப்பவும் அப்படித்தான் இருக்கிறார். எல்லோர் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.

Advertisement

நெப்போலியன் குறித்து மங்கையற்கரசி கூறியது:

என்னுடைய அம்மா அப்பா இறந்தபோது நெப்போலியனுக்கு 16 வயது. அவரை நான்தான் வளர்த்தேன். நெப்போலியன் அமெரிக்காவிற்கு சென்றபோது தான் நான் எங்களுடைய பூர்வீக ஊருக்கு வந்துவிட்டோம். அதுவரை நான் நெப்போலியன் உடன் சென்னையில் இருந்தேன். எனக்கு மூன்று பிள்ளைகள். அமெரிக்கா சென்ற பிறகு அவரால் அடிக்கடி சொந்த ஊருக்கு வரவில்லை. இருந்தாலும் மாதத்திற்கு இரண்டு மூன்று முறை போன் செய்து பேசுவார். என்னை கூப்பிட்டு கொண்டு தான் நெப்போலியன் இருக்கிறார். மனிதர்கள் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டவர். அவர் படத்தில் நடித்து இவ்வளவு பெரிய ஆளாக இருப்பதை நினைத்து ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement