நெப்போலியன் மகனின் திருமணம் எப்போது தெரியுமா? வெளியான பழங்கால ஸ்டைல் பத்திரிகை

0
422
- Advertisement -

நெப்போலியன் மகனின் திருமணம் தேதி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-

அங்கே இவர் ஹைடெக் விவசாயி ஆகவும், பெரிய தொழில் அதிபராகவும் இருக்கிறார். இப்படி இவர் இருப்பதற்கு காரணமே அவருடைய மகன் தனுஷ் தான். தனுசிற்கு நான்கு வயது இருக்கும்போதே தசைச் சிதைவு என்ற நோய் ஏற்பட்டது. இதற்காக நெப்போலியன் பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தார். இருந்தும் பயனில்லாமல் போனது. மேற்கொண்டு இவர் திருநெல்வேலி அருகே பாரம்பரிய முறைப்படி இந்த நோய்யை குணப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

நெப்போலியன் மகன் குறித்த தகவல்:

இருந்தாலுமே, அந்த நோய் முழுவதுமாக குணம் ஆகவில்லை. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் நிகழக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு நெப்போலியன் திருநெல்வேலியில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டியிருக்கிறார். பின் தனுஷ் உயர் சிகிச்சைக்காக நெப்போலியன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கேயே தன் மகனுக்காக தங்கிவிட்டார். தனுஷும் தன்னிடம் இருக்கும் குறையை மறந்து பல துறைகளில் சாதித்து இருக்கிறார்.

தனுஷ் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் நெப்போலியன் நடத்தி வரும் பல நிறுவனங்களை தனுஷ் தான் கவனித்து வருகிறார். இதனால் தனுசுக்காகவே ஒரு தனி நிறுவனத்தை நெப்போலியன் உருவாக்கி இருக்கிறார். தற்போது தனுசுக்கு 25 வயது ஆனதால் நெப்போலியன் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார். சமீபத்தில் நெப்போலியன் மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

-விளம்பரம்-

நெப்போலியன் மகன் திருமணம்:

மேலும், தனுஷின் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது. அதனால் தனுஷ் இந்தியா வரவில்லை. நெப்போலியனின் வருங்கால மருமகள் பெயர் அக்ஷயா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம். அங்கு மூலக்கரை பட்டியை சார்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் தான் அக்ஷயா. இவரைத்தான் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் செய்ய இருக்கிறார். அதோடு தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ காலின் மூலம் நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணம் குறித்த அப்டேட்:

தற்போது நெப்போலியன் தன்னுடைய மகனின் திருமண வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். திருமணம் ஜப்பானில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நெப்போலியன் மகனுடைய திருமணம் தேதி குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பழங்கால முறைப்படி ஓலைச்சுவடியில் அச்சடிக்கப்பட்ட பத்திரிகையை அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. அதில் திருமண தேதி நவம்பர் ஏழாம் ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெற இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தற்போது கல்யாண பத்திரிகை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement