நெப்போலியன் மகன் தனுஷ் தனது வருங்கால மனைவியுடன் நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது வருகிறது. கடந்த சில நாட்களாகவே நெப்போலியன் மகனின் திருமணம் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ், மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகனின் சிகிச்சைக்காகவே இந்தியாவை விட்டுச் சென்று குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன். அமெரிக்காவில் நெப்போலியன் ஹைடெக் விவசாயம் செய்வதோடு, ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி அதற்கு தனுஷை முதலாளி ஆகியிருக்கிறார்.
தனுஷ் நிச்சயதார்த்தம்:
அந்த நிறுவனத்தில் தமிழர்கள் ஏகப்பட்ட பேர் பணி புரிவதாக கூறப்படுகிறது. அமர்ந்த இடத்திலிருந்து தொழில்நுட்பத்தின் வசதியோடு அந்த நிறுவனத்தை நிர்வாகித்து வருகிறார் தனுஷ். இப்படி இருக்கும் சூழலில் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, சமீபத்தில் தான் அவருக்கு திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவோடு நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும், தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ கால் மூலமாக தான் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம் குறித்த தகவல்:
பின், இவர்களது திருமணம் ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நெப்போலியன் குடும்பம் அமெரிக்காவிலிருந்து ஜப்பான் புறப்பட்டனர். ஜப்பானில் தனது திருமணம் நடக்க வேண்டும் என்பது தனுஷின் ஆசை என்று கூறப்படுகிறது. நாளை நவம்பர் 7 நடக்கவிருக்கும் இந்த திருமணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்தும் பல பிரபலங்கள் சென்று இருக்கின்றனர். அந்த வகையில் மீனா, கலா மாஸ்டர், சரத்குமார், ராதிகா உள்ளிட்டோ சில நாட்களுக்கு முன்பே ஜப்பானுக்கு சென்றுள்ளார்கள்.
திருமண நிகழ்ச்சிகள்:
அவர்களை நெப்போலியன் ஜப்பான் விமான நிலையத்துக்குச் சென்று அன்போடு வரவேற்றார். அந்தப் புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. மேலும் திருமணத்தில் சங்கீத், ஹல்தி, மெஹந்தி ஆகிய நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. இதில் சங்கீத் நிகழ்ச்சியை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்தி கொடுக்கிறார். மேலும் குஷ்பூ, ராதிகா, சரத்குமார் உள்ளிட்டோர் நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. கலா மாஸ்டர் இந்த பொறுப்பை ஏற்றது தனக்கு பெரும் பாக்கியம் என்று நெப்போலியன் கூறியிருந்தார்.
தனுஷ்-அக்ஷயா போட்டோ ஷூட்:
இந்நிலையில் நாளை திருமணம் நடக்கவிருக்கும் சூழலில், மணமக்கள் தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. அதில் பிங்க் நிறத்தில் இருவரும் ஆடை அணிந்திருக்கிறார்கள். மணமக்கள் இருவரும் ஜோடியாக வரும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோவை பார்த்து, இதே சந்தோஷத்தோடு மணமக்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.